பக்கம்:மனோன்மணீயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : நான்காம் களம் 53. தோற்றிய தெல்லாம் இங்ங்னஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ 25. ஒதா யுன்றன் உளமுறு துயரே! செவிலி : # உன் பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென் னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் - யாம்படுந் துயரம் அறிந்துங் 30. காம்படு தோளி' கருதாய் போன்மே. (2). ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண் ணிய மனைத்தும் பிள்ளை யில்லா செல்வங் கள்ளியிற் சோறே போலப் போரே யன்றி 35. வேறே யென்பயன் விளைக்கு மென்றுணி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங்-கெட்டுப் பரிதி' * வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் 40. கணியென வுனையான் கண்டநாள் தொட்டு நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர் தரித் திருந்தேன்; செயிர்த் ரறமும் 45. வாய்மையும் மாறா நேசமுந் துரப்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்குங் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், 50. எதுவோ வுறுதி யியம்பாய்? = மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! (3). 1. பவளம் போன்ற உதடுகள் 2. மூங்கிலைப் பழிக்கின்ற.. தோள்களை உடையவளே 3. ஞாயிறு, 4. துன்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/55&oldid=856780" இலிருந்து மீள்விக்கப்பட்டது