பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஐம்பதிற்கும் அதிகமான பாடல்களில் பாடியுள்ளார். இந்த்ப் பாடல்களில் மிக்க சிறப்பாக பாஸ்கர சேது பதியையும் அவரது தந்தை முத்துராமலிங்க சேதுபதி யையும், பாடியிருப்பது படித்து இன்புறுத்தக்கவை யாக உள்ளன. சேதுபதி மன்னர்களுக்கு “வித்தியா வினோதன்', 'சங்கீத சாகித்திய வித்யா வினோதன்', ' வினாபிரசங்கன்' பரத நாடகப் பிரவீணன்' 'பரத நாடக பக்திப் பிரியன்' என்ற விருதாவளிகள் இருந்த தை அவர்களது செப்பேடுகள் சொல்கின்றன. அதே கொடிவழியில் வந்த இந்த மன்னர், கலையார் வம் நிறைந்தவராக கல்வி கேள்விகளிலும் இசையிலும் சிறந்த வராக இருந்ததில் ஒன்றும் வியப்பில்லை. பள்ளிவாழ்க்கையின் பொழுது மேலைநாட்டு இசைக் கலையான பியானோவில் இவர் தேர்ச்சி பெற்று இருந் தார் அல்லவா? ஒருமுறை தனக்கு நெருக்கமான செட்டி யார் வீட்டிற்குச் சென்று இருந்த பொழுது, அந்தப் பெரிய மனிதரது மகள் மிகவும் சிறப்பாக பியானோ இசைத்த பாங்கினை, இசையினை, மிக அருமையாக இருந்ததாகப் பாராட்டி தனது நாட்குறிப்புகளில் குறிப் பிட்டுள்ளார் இங்ங் னம் இதயத்தை ஈர்க்கும் இசையில், ஈடுபாடு கொண்டிருந்த இந்த மன்னரைப் பற்றிப் பல செப்திகள் சொல்லப்படுகின்றன. அப்பொழுது சிறந்த வயலின் விற்பன் னராக விளங்கிய இருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் ஒருநாள் மன்னரது தர்பாரில் அமர்ந்து அருமையாக வயலினை வாசித்துக் கொண்டிருந்தார். கச்சேரி நிறைவு பெறும் நிலையில் மன்னரதி விருப்பப் படி காம்போதி ராகத்தை மிகவும் விரிவாக வாசித்து லய வியன்னியாசம் செய்து முடித்தார்.பின்னர் வித்வான் அவருக்கு பிரியமான கீர்த்தனம் ஒன்றையும் இசைத்தார். "நடமாடித் திரிந்த உனக்கு இடதுகால் உதவாமல் முடமான தேன் என்று சொல் வீர்-ஐயா!' 16. Diary Entry Dated - 13. 4. 1893