பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இராமேசுவரம் திருக்கோயில் காரியங்களை நடத்தி வந்த இராமநாத பண்டாரத்தார் பற்றிய குறைபாடுகளையும் மிகுந்த சஞ்சலத்துடன் வெளியிட்டுள்ளார்’ இத்தகைய குறைபாடுகள் நீங்கிய நிலையில் கி.பி. 1895ல் திருஉத்திர கோசமங்கை திருக்கோயிலில் திருவாதவூர் அடிகளின் குருபூஜை விழாவை திருவாவடுதுறை ஆதினத்தின் அறி வுரைப்படியும். அவரது தொண்டர்கள் உதவியுடனும் சிறப்பாக மன்னரே நேரில் இருந்து நடத்தினார்." அந்த விழாவையொட்டி நடந்த சுவாமி புறப்பாட்டில், மன்ன ரும் பஜனைக் குழுவினருடன் சேர்ந்து திரு வீதிகளில் திருவாசகப் பாடல்களைப் பாடிச் சென்றது மறக்க முடி யாத காட்சி ஆகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் பொழுது அந்தந்தத் தெய்வத் திருமேனிகளைப் புகழ்ந்து அவரே பாடல்கள் இயற்றிப் பாடி மகிழ்வதுண்டு. மதுரைச் சோமசுந்தர ரது ஆலயத்தி கு ஒருமுறை சென்று இருந்த பொழுது, ஆலவாய் அமரும் அந்த அரசர் மீது சதேவை அமரும் இந்த அரசர் பதிகம் ஒன்றை உருக்க மாசுப் பாடி வழிபாடு செய்தார். அந்த ஆலவாய்ப் பதி கம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறிது ஒரு நாள் முகவையில் ராஜராஜேஸ்வரி அம்மனை அகங்கு எளிர தரிசித்த பொழுது, அம்மையின் திருக்கோலத்தில் ஈடுபட்டு கீர்த்தனை யொன்றை மன்னர் இயற்றி இசைத்துப் பாடினார். திருக்கோயில் களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முறையாக அமைக்கப் பட்டிருந்தால் அவைகளில் தன்னை மறந்து ஈடுபட்டு சம்பந்தப் பட்டவர் களைப் பாராட்டி பரிசு வழங்கவும் அவர் தவறியதில்லை. ஒரு முறை காஞ்சிபுரம் ஆலயம் ஒன்றில் நடைபெற்ற இராமநவமி விழா விற்கு மன்னர் சென்றிருந்தார். அப்பொழுது நடைபெற்ற சுவாமி புறப் பாட்டின் பொழுது, அந்தணர்கள் மிகுந்த பக்தி சிரத்தை யுடன் வேதங்களை முழக்கி வந்த தை அக்கரையுடன் கவனித்தார். அங்கேயே அந்த அந்தணர்களுக்கு ஐநூறு வெண் பொற்காசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை 24. Diary Entry dated – 9 8–1893 25. Madurai Mail - 13-7-1895