பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 13 மன்னிக்கத் தெரியாதவர் வேலைக்காரன் அவனை ஒரு மாதிரியாக நோக்கினன். நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் நின்றீங்களா நீங்களும்?' என்று கேட்டான். - பின்னே கண்ணே மூடிக்கொண்டு நின்றிருக்கனும் என்கிருயா?" என்று கிண்டலாகப் பேசினன் மாதவன். 'அந்தப் பயலே உதைத்து அனுப்பியிருக்கவேண்டாம்? அல்லது சண்டைபோடாமலாவது விலக்கியிருக்கலாமே!’ வலு உள்ளவர்கள் வலு இல்லாதவர்களைத் தாக்குவதும் நசுக்குவதும் தானே வாழ்க்கையில் சகஜமாக இருக்கிறது. அதை எல்லாம் யார் தடுக்கிருர்கள்?’ என்ருன் மாதவன். தோட்டக்காரன் அவனே வெறித்துப் பார்த்துவிட்டு நகர்ந்தான். வாங்க ஐயா, வீட்டுக்குப் போகலாம் என்று அவன் அழைத்தபோது பாலச்சந்திரன் தலையசைத்து மறுத்து விட்டான். - அவன் போன பிறகு பாலு சொன்னன்: அடுத்த தடவை அந்த அயோக்கியப் பையன் வரட்டும்! அவன் பல்லை. உதிர்த்துவிடுகிறேன்’ என்று. அதுதான் சரி. பல்லே உதிர்ப்பது மட்டும் போதாது, எத்தனே இருக்குது எண்ணிப் பாருடா கழுதையின்னு சொல்வி அவன் கையிலே கொடுக்கணும் என்று மாதவன் சிறுவனுக்கு உற்சாகமூட்டினன். உங்களைப் பெரிய எசமான் கூட்டிவரச் சொன்னங்க. சின்ன ஐயாவையும் அழைச்சிட்டு வரும்படி சொன்னங்க" என்று அறிவித்துக்கொண்டு ஒரு ஆள் வந்தான். - "இதோ வந்தாச்சு!" என்று கிளம்பினன் மாதவன். பாலச்சந்திரனும் அவனுக்குப் பின்னலேயே போனன். , . இதே வேளையில் வீட்டில் மற்ருெரு புதுமை நிகழ்ந் திருந்தது. . "உண்மை சொல்ல அஞ்சாத" பேபி, தான் சொல்ல வேண்டும் என வெகு காலமாக எண்ணிவந்த சிலவற்றை