பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 岛理, அவளுடைய புத்தகங்கள் நோட்டு வகையராவை எல்லாம் எடுத்துக் குவித்து வைத்து, தீ மூட்டினன். திகுதிகு வென்று நெருப்பு பற்றி எரிந்தது. அவனையும், விழுந்து கிடக்கும் அவளேயும், அந்த அறையையும் பிரகாசமாய் எடுத்துக்காட்டியது. தீயை ஒருவித திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்த அவன் சொன்னன்: ' - 'நீ நல்லா வரணுமின்னு உனக்குப் படிப்புச் சொல்லித் தர ஆசைப்பட்டேன். படிப்பு ரொம்ப நல்லது. ஆளுல் அதன் பேரைச் சொல்லிக்கொண்டு, தங்கள் பலவீனங்களே அடக்கித் திருத்தமுடியாமல் மனம்போன போக்கிலே அலையத் துணிகிருங்க பல பேரு. அவங்க தங்க பேரையும், நாகரிகத் தின் பேரையும், படிப்புப் பேரையும் கெடுத்துப் போடுருங்க, நீயும் அந்த இனத்தைச் சேர்ந்தவதான் போலிருக்கு. உன்னை அப்படிப் போகவிடமாட்டேன். ஆமா, இனிமேல் உனக்குப் படிப்பும் வேண்டாம், முற்றிய நாகரிகமும் வேண்டாம். ஒழுங்கா, நல்ல பெண்ணு, இந்த வீட்டுக்குள்ளேயே இரு. இனி நீ தப்பு தண்டாவுக்குப் போனியோ, உன் கழுத்திலே சுருக்குமாட்டி உத்தரக் கட் டை யி லே தொங்கவிட்டுப் போலீஸ்லே போய் ஆஜராகிவிடுவேன். நான் ஜெயிலுக்குப் போகப் பயப்படமாட்டேன். இதை நினைவிலே வச்சுக்கோ!. பிறகு அவன் எழுந்து, கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். தன் பசி தணிந்து, வெறிக்குணம் குறைந்து வருகிற ஒரு ஓநாயைப் பார்ப்பதுபோல், அவனைக் கண்டு அஞ்சி ஒதுங்கினர்கள் வெளியே நின்றவர்கள். அவர்களைக் கவனியாதவளுய், அழுதுகொண்டு கிடக்கும் சுந்தரத்தின் மேனியில் தாறுமாருகப் பதிந்து ரத்தம் கசிந்த வாறு காணப்படும் கசையடித் தழும்புகளைப் பார்த்து அவர் கள் அவனைச் சொல்லாலும் வசவுகளாலும் குத்திக் குதறிப் பிய்க்கப் போவது குறித்து எவ்விதமான எண்ணமும் கொள்ளாதவளுய், தன் வழியே நடந்தான் சுப்பிரமணியன். இனிமேல் நம்ம சுந்தரம் தங்கக் கம்பியாக நடந்துகொள் வாள். நாம இழுக்கிற இழுப்புக்கெல்லாம் இழைந்து கொடுப்