பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 龛露 மகராஜபிள்ளை அவர்களின் மனைவி சண்பகம் அவரை விட வயதில் மிகவும் இளையவள். அவர் வீமன் மாதிரி இருந்தார். அவளோ பூங்கொடிபோல், சிற்றுச் சினுக் கென்று செங்கரும்பு மாதிரி காட்சியளித்தாள். அவள் அவரிடம் பயபக்தியோடு, பணிவுடன், கடமை தவருத பத்தினியாகத்தான் நடந்து வந்தாள். என்ருலும், அவள் மன ஆழத்தில் மக்கிக்கிடந்த ஆசை கள் தெளியவிட்ட மெளனக் கொழுந்துகள் எத்தனையோ! அங்கு மண்டிக்கிடந்த ஏ க்க ங் களு ம் ஏமாற்றங்களும் எழுப்பிய எண்ணப் புகைகள் எத்தன்மையனவோ! கெளதம ரிஷிக்கு நாள் தவருது அன்புப் பணிவிடையும் கடமைகளும் புரிந்துவந்த அகலிகையின் மனம் கூட, இளம் பருவத்தில் தான் கண்டிருந்த இந்திரன எண்ணி சஞ்சலித்த தாகச் சிலர் சொல்லவில்லையா என்ன? தந்திரத்தையும் மந்திரத்தையும் துணைகொண்டு, தாடிமுனி ஒரு போட்டியில் வெற்றிபெற்று அகலிகையைப் பரிசாக அடைந்திராவிட்டால் இந்திரனே அவளே அடைந்திருக்கக்கூடும் என்றுகூடச் சொல்லியிருக்கிரு.ர்கள்! இல்லையா? - சண்பகத்தின் வாழ்வுக்கும் இந்தப் புராணம் பொருந் தும். அவள் அத்தை மகன் சுந்தரம் இளமையிலேயே அவள் கவனத்தைக் கவர்ந் தி ரு ந் தான். அவள் உள்ளத்தின் மென்மையான பகுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தான். அவன் அழகன். இளைஞன். அவளுக்கு ஏற்ற துணைவகுகக்கூடிய நலன்கள் பெற்றவன்தான். ஆனால், மகராஜபிள்ளை பணப் பெருமை, நகைகள், பெரியவீட்டு அந்தஸ்து, ஊரிலே செய லும் செல்வாக்கும் என்ற சக்திகளைக் காட்டி பெண்ணைப் பெற்றவர்களின் மனசை மயக்கி, சண்பகத்தைக் கல்யாணம் செய்துகொள்வது சுலப சாத்தியமான காரியமாக இருந்தது. கந்தரம், பத்தாவது படித்துப் பாஸ்பண்ணியவன். ஏதோ ஒரு ஆபீசில் குமாஸ்தா வேலை பார்க்கிறவன். மாதச் சம்பளம் என்கிற சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு எப்படி நல்லபடியாகக் காலம் தள்ளமுடியும்? நாளைக்கு நம்ம