பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ &ぎ கிளுல், அதை முழுதும் கேட்கக்கூடவா முடியவில்லை?அவன் மனக்குறளி முனங்கியது. அப்படி அவர் பிரமாதமான வேலை எதுவும் செய்து கொண்டிருக்கவில்லை அப்போது. பத்திரிகை படிப்பதுபோல் சும்மா பாவனை பண்ணுகிருர் என்றுதான் மாதவனுக்குப் பட்டது. தேடி வந்தவனை-அதிலும் வேலைகேட்டு வருகிற வனே--உடனடியாக விசாரித்துவிட்டால் அப்புறம் பணம் படைத்த சீமானுக்கு மதிப்பு என்ன இருக்கப்போகிறது: அவர் கெளரவம் இதுபோன்ற சமயங்களில்தானே கொடி கட்டிப் பறக்கமுடியும்!’ என்று அவன் எண்ணிஞன். கால்மணி நேரம் கழிந்திருக்கும். அவர் பலமாகக் கனத்துக்கொண்டார். திண்ணையின் பக்கம் கண் திருப்பினர். அவனை அப்பொழுதுதான் பார்த்தவர்போல, யாரது அங்கே நிற்கிறது? இப்படி முன்னலே வா’ என்று உத்திர விட்டார். - மாதவன் அவர் எதிரே வந்து நின்ருன். அவர் அவனை எடைபோடுவதுபோல் ஏற இறங்கப் பார்த்தார். அவன் தோற்றம் அவருக்குப் பிடித்திருந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எல்லோர் விஷயத்திலும் உண்மையாகிவிடுவதில்லை. குரூர முகம்படைத்த சிலர் நல்ல உள்ளம் பெற்றவர்களாக இருக்கிருர்கள். கொடிய செயல் கள் புரியும் சிலர் சதா இன்முகத்தோடு திரிகிருர்கள். மாதவனின் உள்ளத்திலே நிறைந்திருந்த கசப்பையும் வெறுப் பையும் அவன் முகம் எடுத்துக்காட்டவில்லை. அன்றலர்ந்த செந்தாமரையை அது நிகர்த்திருக்கவில்லை என்ருலும் அதிலே ஒரு குளுமையும் சாந்தமும் நிலவியது. அறிவின் ஆழமும் அனுபவமும் ஒருவாறு பெற்றிருந்த அவன் கண் களில் விசேஷ ஒளி கனன்றுகொண்டிருந்தது. 'உம். உன்னே எப்படி நம்புகிறது?’ என்று கேட்டார் அவா. "என்னை நம்புவதும் நம்பாமலிருப்பதும் உங்கள் மனசைப் பொறுத்தது. பத்திரிகையில் விளம்பரத்தைப் பார்த்தேன்: