பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இருளில் ஒளி தின்பதற்காகத் தம்முடைய வயல்மருங்கு உள்ள நூற்றுக் கணக்கான பூக்களைப் பறித்துப் போடும் ஒருவர், வழியில் தெருமருங்கே உள்ள மரங்களி லிருந்து வேடிக்கைக்காகக்கூட ஒரு பூவினைப் பறித்துவிடுதல் ஆகாது என்று அவர் கூறினர்; பசுக்களுக்கு உண்வுதரும் கட்டாயத்தால் புல்லினை யும் பூண்டினையும் ஒருவர் பறித்துத் தந்தாலும் தரலாம்; அவசியம் இல்லாதபொழுது பிற உயிர் களை அழிக்க முற்படுதல் பாபம் என்ருர். மனிதர் உயிர் வாழ்வதற்காக, மனிதர் நோயினின்று விடு படுவதற்காக மாக்களுக்கு நச்சு மருந்துகளைக் கொடுத்துச் சோதித்துப் பார்ப்பதும், மாக்களுக்கு ஊசிபோட்டு நோயினை உண்டாக்குவதும் ஆகிய செய்திகள் தம்மளவில் நல்லனவல்ல என்ருர். மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக, விலங்குகளுடைய உயிர்களையும் பிற பொருள்களி அடைய உயிர்களையும் துயர்ப்படுத்துவது கட் டாயமா என்று ஒவ்வொரு வேளையும் சிந்தித்துப் பார்த்த பின்னரே அச்செயலில் இறங்கவேண்டும் என்ருர். பிற உயிர்ப் பொருள்களுக்குத் துயர்தர வேண்டுவது கட்டாயமாக ஏற்படும்பொழுதுகூட, கூடிய வரையில் அந்தத் துயரினைக் குறைவாக்க முற்பட வேண்டும் என்ருர். மருத்துவ மாணவர் முன்னர்ே அறிந்துள்ள சில செய்திகளைக்கூட விளக்கிக் காட்டுதற்கு மருத்துவ நிலையங்களிற் பல உயிர்ப் பொருள்கள் அழித்துக் காட்டப்படுவது குறித்து அவர் மனம் இரங்கினர். நாம் உயிர்வாழ வேண்டி, நாம் நோய் தீரும்பொருட்டு, நமக்காக