பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 95 பல பொருள்கள் சாக வேண்டியுள்ளன. சிலர் சிலர் போலிச் சமாதானங்களைச் சொல்லிக் கொள் ளுவர். ஆனல், உண்மையறம், உயிர்களின் தொழு தகைமையில் நம்பும் அறம், பல சமாதானங்கள் கூற முன்வராது. உயிர்களைப் பாதுகாப்பதும் உயிர்களை வளர்ப்பதுந்தான் நல்லது என்றும், உயிர்களுக்கு ஊறு செய்வதும் உயிர்களை அழிப் பதுந் தீது என்றும் இந்த உண்மையறம் சொல் அம். உயிர்களின் மதிப்புடைமையைப்பற்றி மக்கள் எந்த அளவு எண்ணத் தொடங்குகிருர் களோ அந்த அளவிற்கு நாளடைவில் உலகத்தில் அழிவு குறையும் ; வளர்ச்சி மிகும். எந்த எந்த அளவு அழிக்கலாம் என்று பொதுவாக வரையறை செய்து கூறுதல் இயலாது. ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியொடு தாமே தாமே அவ்வப் பொழுது எண்ணிப்பார்த்து முடிவு செய்துகொள்ள வேண்டும். மக்கட்கும் மாக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஏதாவது ஒன்றினுடைய உயிரை ஒருவர் போக்குவதாய் இருந்தால், அவ்வாறு செய்வது இன்றியமையாததுதான என்பதைத் தெளிவாக ஆராய்தல் வேண்டும். மிகவும் தாழ்ந்தது அல்லது இழிவானது என்ற காரணத்தில்ை, எந்த உயிரின யும் எளிதில் அழித்துவிடுதல் கூடாது. பிற உயிர் களை அழிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும் எல்லையளவு ஒருவர் செய்யலாம்; அதற்குமேல் செய்தல் கூடாது என்று சுவைட்சர் பல முறைகள் கூறினர். எடுத்துக்காட்டாக, தம்முடைய பசு