பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இருளில் ஒளி ஒருவர் தம்முடைய உயிரின்கண் பற்று வைத்து, அது மதிக்கத் தக்கது அல்லது வணங்கத் தக்கது என்று கருதுவாராயின், ஒருவர் நெஞ்சில் உண்மை உடையவராக இருக்கவேண்டும் என எண்ணத் தலைப்பட்டுவிட்டார் என்பது கருத்து. மனச்சான்றிற்கு மாறுபாடு இல்லாமல் எந்தப் பொருளையும் அடையவேண்டும் என்ற எண்ணம் ஒருவர்க்குப் பிறக்கும். ஒருவர் நெஞ்சிற் பொய்க் கின்ருர் எனில், அவர் தம்முடைய உயிரையே நஞ்சு பூசிய ஈட்டியினுற் குத்திக்கொள்கிருர் என்பது கருத்து. ஒருவர் தமக்கு உண்மை உடையவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படை யிலிருந்து, அவரை அறியாமலே பிறரிடத்தில் ஈடு பாடு உடையவராக மாறிவிடுவார். மனிதருடைய இன்பங்கள் பிற மனிதர்க்குத் துயர்தரும் அடிப்படையிலும், பிற உயிர்ப் பொருள்களுக்கு இடர் விளைக்கும் அடிப்படை யிலும் சில வேளைகளில் உண்டாகின்றன. ஒருவர் நடந்து செல்லும்பொழுது, நிலத்திற் கிடக்கும் உயிர்ப்பொருள்கள் எத்தனையோ துயருற்று அழிக் கப்படுகின்றன. வீட்டில் உள்ள எலிகளையும் தேள் களையும் ஒருவர் கொல்ல வேண்டிய அவசியம் உடையவராகி விடுகிருர். சிலந்திக் கூடுகளையும் குளவிக் கூடுகளையும் கறையான் புற்றுக்களையும் அழிக்கவேண்டிய நிலையில் உள்ளவர்கள் எத்தனை எத்தனை பேர் ஒருவருடைய உயிரைப் பாதுகாப் பதற்காக ஆயிரக்கணக்கான விஷக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் வாழப்