பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இருளில் ஒளி பிடிக்கப்பட்டுள்ள கருவிகளால் மட்டும் அமைந்து விடுவதொன்று அன்று. முழு நாகரீகம் மக்க ளுடைய ஆன்ம வளர்ச்சியை ஒட்டியதாகும். ஆன்ம வளர்ச்சி இன்றிப் புதுப்பொருள்கள் கண்டுபிடிக்கும் அளவிலேயே உலகம் செல்லு மால்ை, அது முழு நாகரீகம் அடைந்துவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கமாட்டாது. நம்முடைய அறிவினைப் பெருக்கிக்கொள்வதாலும், நம்முடைய ஆற்றலைப் பன்மடங்கு ஆக்கிக்கொள் வதாலும் நாகரீகம் வளர்வதுபோலத் தோற்றும்; மக்களினம் வாழக்கூடிய சமுதாய அமைப்பின் வளர்ச்சியால் நாகரீகம் வளர்வதுபோலத் தோற் றும். ஆளுல், ஆன்ம வளர்ச்சியின்றி, அறிவி லுைம் ஆற்றலினலும் சமுதாய அமைப்பினுலும் பயன் இல்லை. எனவே, முழுமையான நாகரீகம் என்பது ஆன்ம வளர்ச்சியோடு தொடர்புடைய தாய் இருக்கவேண்டும் என்று முனிவர் சுவைட்சர் முடிவுகட்டினர். சீன தேசத்துப் பேரறிஞர் ஒருவர் இரண் டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன் எழுதிய கதை ஒன்றில் தோட்டக்காரன் ஒருவன் பேசப் படுகிருன். அவன் குடத்தைத் துரக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் தண்ணிர்த் துறைக்குப் போய்க் கொண்டிருந்தான். அவனை நோக்கி, மாணவன் ஒருவன் ' உன்னுடைய வேலையைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டான். அதற்கு அந்தத் தோட்டக்காரன், எப்படிக் குறைக்க முடியும்?’ என்று கேட்க, அவன் ஒர் ஏற்றம்