பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 103 அமைத்துக்கொண்டு, முன்னும் பின்னும் அழுத்து தலில்ை, எளிதில் தண்ணிர் கிடைக்கப்பெறலாமே? என்று பதில் உரைத்தான். தோட்டக்காரன், ஓர் இயந்திரத்தை நான் பயன்படுத்துவதினுல் இயந் திரத்தை ஒத்த உள்ளம் எனக்கு நாளடைவில் உண்டாகிவிடும். நான் மனிதனுக இருக்க விரும்பு கிறேன்; பொறியாக மாற விரும்பவில்லை” என்று கூறிஞன். இவ்வாறு அமைந்துள்ள சீனக் கதை யில் வரும் தோட்டக்காரன் எதிர்பார்த்தவாறு, மக் கள் பலர் வெறும் பொறிகளாக மாறிவிட்டார்கள் என்று சுவைட்சர் கூறி, மக்கள் மக்களாக வாழ முற்படவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். விஞ்ஞானத் துறையிற் புதியனவாகச் செய்யப் படும் ஆராய்ச்சிகளின் பயனுலும், புதியனவாக உண்டாக்கப்படும் பொருள்களிலுைம் மக்கள் உயி ருடன் இருப்பதற்கே இடையூறுகள் பல ஏற்பட்டுள என்று சுவைட்சர் இரங்குவது உண்டு. விஞ் ஞானத்தின் வளர்ச்சி ஒரு பக்கம் இவ்வாறு இருளுடையதாய் இருப்பதுபற்றி அவர் அடிக்கடி வருந்துவது உண்டு. உலகத்திற் புது நாகரிக விளைவுகள் பல தோற்றி இருப்பினும், மனிதன் மனிதனுக இருத்தல் வேண்டும் என்பதைப் பல இடங்களிற் சுவைட்சர் வற்புறுத்தியுள்ளார். மனி தன் மரமாகி விடக்கூடாது,கல்லாகிவிடக்கூடாது, பொறியாகி விடக்கூடாது; உணர்ச்சியுள்ள மனித வுள்ளம் படைத்தவகை, செயலாற்றும் திறமை உள்ளவகை, பிறர் நலத்திற்காக உழைக்கும் வீர ஞக இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்தி