பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 105 வனை அடிமைப்படுத்திக்கொள்ளுதற்கு வழிவகை தேடியுள்ளான். ஆயிரம் இயந்திரங்களை யுடைய மனிதன் அந்த இயந்திரங்களை இயக்குகின்ற வர்கள்மீது ஆதிக்கஞ் செலுத்துகின்ருன். புதுக் கண்டுபிடிப்புக்களால் மக்கள் நூருயிரவர் ஒரு பொத்தான் அசைவில்ை ஒரு கணத்தில் அழிந்து படக்கூடிய நிலைமை உண்டாகியிருப்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாவா எனச் சுவைட்சர் கேட்ப துண்டு. இக் கொடிய ஆற்றல் நமக்கு வருவதாய் இருந்தால், அதனை வேண்டாம் என விடுப்பதற் குரிய செவ்விய மனத்தை உண்டாக்கிக்கொள்ளு தல் வேண்டும் என்று அவர் பல இடங்களிற் சொல்லியுள்ளார். ஒவ்வொரு நாடும் மற்ருெரு நாட் டினை அழிக்கக்கூடாது என்ற எண்ணத்தை வலுப் பெறச் செய்துகொள்ளக்கூடிய பொறுமை மனப் பான்மையைத்தான் வளர்த்தல்வேண்டும் என் பதை அழகுபடப் பல வேளைகளில் அவர் எடுத்து மொழிந்துள்ளார். அத்தகைய பண்பாடு ' உயி ரினத்தின் தொழுதகைமை ' என்ற கொள்கையால் நிலையுறும். \உயிர்களிடத்து வைக்கக்கூடிய பெரு மதிப்பில்ை, பிற நாடுகளையும் மக்கள் பிறரையும் நம் நாடுகளாகவும், நம் மக்களாகவும் மதிக்கும் எண்ணம் உண்டாகி, உலகம் முழுதும் ஓர் இனம் என்ற கொள்கை வலியுறும் என்பது அவர் நோக்கம். எனவே, உலக மக்கள் ஒற்றுமையுற்று, வளர்ச்சியுடையவராய் வாழ்தற்குச் சுவைட்ச ருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய அற வுரைகளும் பெரிதும் பயன்படும் என்பது உறுதி.