பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை 9 ஆதலால், சுவைட்சர் அதனை அணிந்துகொள்ள மறுத்துவிட்டார். இவ்வாறு, சிறு வயதில் எளியார்பொருட்டுச் சுவைட்சர் எண்ணிய எண் ணங்கள் வயது ஏற ஏற, வலியுடையனவாகி, நல்ல பயன் விளைத்தன என்பது பின்ன்ர் விளங்கும்) (கிராமப் பள்ளிக்கூடத்திலிருந்து அவர் ஒன்ப தாவது வயதில் மல்ஹாசன் (Mulhausen) என் னும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டார்.) அவ்வூரில் லூயிஸ் (Louis) என்ற அவ ருடைய மாமனும், சோபி (Sophie) என்ற அவ ருடைய மாமியும் மகவின்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய இல்லத்திலிருந்து பள்ளிக்கூடத் திற் படிக்கும் வாய்ப்பினைச் சுவைட்சர் பெற்ருர். அந்த வீட்டில் ஆற்றப்பட்ட செயல்கள் எல்லாம் கடுமை உடையனவாகவும் நெறி உடையனவாகவும் இருந்தன. எனினும், அவ்விருவரும் சுவைட்சரை மிக்க அன்புடன் பேணினர்கள். (மல்ஹாசன் பள்ளிக்கூடத்திற் சுவைட்சர் எட்டு ஆண்டுகள் கற்ருர். சில நேரங்களில், அவருடைய ஆசிரியர் கள் அவரைக் கனவுலகத்தில் வாழும் அரைப் பித்தன் என்று கருதினர்கள். ஒருவேளை அவர் சம்பளவுதவி பெறுதற்குத் தகுதியற்றவர் என்று தலைமை ஆசிரியர் நினைத்தற்கு இவ்வாறு ஆசிரி யர்கள் கருதியது ஒரு காரணம். எனினும், நாளடைவில் ஆசிரியர்கள் அவரை நன்கு அறிந்து கொண்டார்கள். நாளடைவில், மற்ற மாணவர் களைக் காட்டிலும் ஒளி உடையவராக அவர் திகழ அற்ருர். முதலில், இசைப் பாடங்களில் அவர்