பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை நாள் சுவைட்சர் அருட்டிரு. ஜான் (St. John) என்பாருடைய ஓவியம் ஒன்றைக் கண்டார். அந்த ஒவியத்தில் அருட்டிரு. ஜானினுடைய தலைமயிர் புடைத்துக்கொண்டு நிற்பதாகவே காட்சி அளித் தது. அக்காட்சி, அவருக்குப் பேருவகையை விளைத்தது. அவருடைய வளையாத தலைமயிர் அவர் கருணை நெஞ்சினர் ஆவதற்குத் தடையாக இருந்ததில்லையே! ஆனல் ஒருவருடைய இயல் பினை ஒருவருடைய தலைமயிர் காட்டும் என்று கூறுவது ஒரு வேளை பொருந்தாததுபோலும்!” என்று சுவைட்சர் கருதினர்.\ (இளமையில், அவர் ஒரு பக்கம் செழிப்பின யும், மறுபக்கம் மக்கள் கண்ணிர் விடுவதையும் கண்டார்; தம் குடும்பத்தாருடைய வாழ்வின் நலன் களையும், உடன் படிக்கும் மாணவர்களுடைய வறுமைத் துயரங்களையும் ஒப்பிட்டு நோக்கினர், மற்ற மாணவர்களிற் பலர் விரல் இல்லாத கையுறை களை விரல்போல் அமைத்துத் தைக்கப்பட்ட தோல் களை உடைய கையுறைகள் (gloves) என அணிந்: திருந்தமையால், தாமும் விரல் இல்லாக் கையுறை களையே அணிந்து கொள்வதாகத் தாயாரிடம் தெரி வித்துவிட்டார். தாயாரோ அவர் அவ்வாறு செய் வது தமது உயரிய வாழ்க்கைநிலைக்கு ஒவ்வாது என்று கருதினர். எனினும், சுவைட்சர் ஏழை மாணவர்களுடைய உடையைப் போன்ற உடை யையே அணிவதில் விருப்பம் கொண்டார். ஒரு நாள், அவருடைய தாயார் நல்ல மேலங்கி செய்து தந்தார். மற்ற மாணவர்கள் மேலங்கிஅணிவதில்லை.