பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை 7 வழக்கமாக வீட்டிற் சொல்லப்படும் வழிபாட்டுரை களொடு அவர் புதுவதாக ஒன்று புகுத்திக்கொண் டார். நாடொறும் உறங்கச் செல்லும் பொழுது தாயார் முன்னிலையில் குடும்ப வழிபாட்டுரைகளைச் சுவைட்சர் சொல்லிய பிற்பாடு, உறங்குமுன் மற் ருெரு சிறு வழிபாட்டினையும் அவர் தமக்கே உரிய தாக்கிக் கொண்டார். ' மூச்சுவிடுகின்ற எல்லாப் பொருள்களையும், ஆண்டவனே, காப்பாற்றி அருள்க; தீமையினின்று அவற்றைக் காப்பாற் றுக ; அவை அமைதியொடு உறங்கட்டும் ' என் பதே அவர் புதுவதாக உண்டாக்கிக்கொண்டு, நாடொறும் தமக்குள் சொல்லிக்கொண்ட கடைசி வழிபாட்டுரை. இதிலிருந்து அவருடைய உள்ளம் புலப்படும். - - சிறு வயதில், அவருடைய சுருட்டைத் தலை மயிர் எவ்வளவு சீவிலுைம் நிமிர்ந்து நிமிர்ந்து நின்றுவிடும். வயது முதிர்ந்த காலத்திலும், அவ ரது தலைமயிர் கட்டிற்கு அடங்கி ஒழுங்காக அமை வதில்லை. சிறு வயதில் அவருடைய தலைமயிரைச் சீவி வகிடு எடுத்துவிட்ட பணிப்பெண் ஒருத்தி அடிக்கடி எண்ணெயை அப்பி, கோதி, வாரி முடித்து வந்தாளாயினும், மணிக்குமணி அந்தத் தலைமயிர் நிமிர்ந்து நின்று விடுவதைக்கண்ட அவள் அவரைப் பார்த்து, 'நீ கட்டுக்கு அடங் காமல் இருப்பது போலவே உன் தலைமயிரும் கட்டுக்கு அடங்காமல் இருக்கிறது” என்று அடிக் கடி கூறினுள். யாது சொல்வது எனத் தெரியாமல் சுவைட்சர் திகைத்து தின்ற நேரங்கள் பல. ஒரு