பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை - பள்ளிக்கடிட வாழ்க்கை வர் ஆயினுர். உயிருள்ள எல்லா மக்களிடத்திலும், உயிருள்ள பொருள்கள் அனைத்திடத்திலும் அன்பு காட்டவேண்டும் என்ற எண்ணம் உடையவர் ஆயினுர் சுவைட்சர். ஏழு அல்லது எட்டு வயதில் ஒரு நாள் அவர் தம்முடைய நண்பன் ஒருவைேடு விளையாட வெளியே சென்றபொழுது, இருவரும் கவண்கல்லாற் பறவைகளைக் கொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. நண்பனுே அவ்வாறு கொன்று கொன்று அப்பழக்கத்தில் ஊறியவன். சவைட்சர் விளையாடுதற்கு எனச் சென்ருரே ஒழிய, பறவை. களைக் கொல்லும் நோக்கத்தோடு செல்லவில்லை. விளையாடச் சென்ற இடத்தில், நண்பன் கவண் கல்லைக் கொடுத்து, அவனைப்போல எறிக என்று சொன்னனுக, சுவைட்சர் கவண்கல்லை எறிவது போல எறிந்துவிட்டு ஓடிவிட்டார். நன்ருகக் குறி வைக்காத காரணத்தால், பறவை கொல்லப்பட வில்லை என்ற எண்னம் நண்பனுக்கு உண்டாகும் படி செய்துவிட்டு அவர் ஓடிவிட்டார். அவ்வாறு அவர் செய்தமைக்குக் காரணம் பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் மனிதன் அன்பும் இரக்கமும் காட்டவேண்டும் என்று எண்ணியதே ஆகும்)குறி தப்பிக் கவண்கல் விட்டெறியப்பட்ட பொழுது, பறவைகள் எல்லாம் அவருடைய தோழனின் கைக்கு அகப்படாமல் அஞ்சிப் பறந்து போய் விட்டன. எனவே, மிக்க மகிழ்ச்சியோடு சுவைட் சர் வீட்டிற்கு வேகமாய் ஒடிப் போய்விட்டார். (மன்பதைகளிடத்தில் சுவைட்சர் அன்புள்ள வர் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இது.