பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை 5 பேயுருப்போலும் என்று கருதி, சிறு வயதில் அஞ்சியதுண்டு என்று அவரே தம் வாழ்நாட் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். கன்ஸ்பாக் பள்ளியில் ஒரு சிறப்பு உண்டு. அஃதாவது, கத்தோலிக்கர்களும் பிராடெஸ் டெண்டர்களும் மாறி மாறி அதே இடத்தில் வழி பாடு செய்தார்கள் என்பது. இன்றுகூட சில கிராமங்களிலும், அறிவு நிரம்பிய பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் இவ்வாறு வழிபாடு மாறி மாறி நடக்கின்றது. மேடைமீது மிக்க தொலையிற் செய்யப்படும் வழிபாட்டைக் கண்டு, கண்கள் எட்டிப்பார்க்க, மனம் வழிபாட்டில் ஆழ்ந்து விடு தற்குத் துணையாக மேடையமைப்பு இருப்பதாகச் சுவைட்சர் கருதினர். (சிறு வயது முதல் சுவைட் சருக்கு எளிய மக்களேர்டு உறவுகொள்வதில் ஆர் வம் உண்டாயிற்று. பள்ளிக்கூடத்திற்கு அவர் போகத் தலைப்பட்ட பொழுது, கிராம மாணவர் போலவே ஏனைய மாணவரொடு உறவுகொள்ள விரும்பினர். பெற்ருேர்கள் நகர மனிதரைப்போல இருப்பதற்காக ஆடை வசதி செய்து தந்ததைக் கூடாதென ஒதுக்கியதோடு, எளிய உடைகளை வாங்கி உடுத்திக்கொண்டு அவர் பள்ளிக்கும் பிற இடங்களுக்கும் சென்ருர். தாழ்த்தப்பட்டவர்க ளிடத்தும் ஒதுக்கப்பட்டவர்களிடத்தும் அவர்க்குச் சிறு வயதுமுதல் இரக்கம் தோற்றிற்று. எவராவது ஒரு மாணவரை வேறு சமய மாணவர் என்று கருதி மற்ற மாணவர்கள் துன்புறுத்தினல், துன்புறும் மாணவருக்கு அவர் துணையாகும் பழக்கம் உடைய