பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். சிறு வயதில் சுவைட்சர் பலமற்றவராகவும் மெல்லியவராகவும் காணப் பட்டார். பிறந்து ஓராண்டு முடியும் வரையிலா வது அவர் உயிருடன் வாழ்வாரா என்றுகூட யேப் படக்கூடிய நிலையில் அவர் உருவம் இருந்தது. ஏனினும்,நாளடைவில் உரம்பெற்று,அவர் வளர்வா ராயினர்) சிறு வயதில், மூன்று அல்லது நான்கு வயது முதல், கன்ஸ்பாக் கிராமக் கோயிலில் நடை பெறும் வழிபாட்டிற்கு அவரை அவருடைய பெற்ருேர் எடுத்துச் செல்லுதல் உண்டு. மேடை மீது ஏதோ ஒரு பேய்வடிவம் உண்டு என்று அப்பொழுதெல்லாம் சுவைட்சர்அஞ்சியது உண்டு. அதற்குக் காரணம், அந்த மேடையில் உள்ள ஒரு கண்ணுடியில் தோன்றி மறைந்துகொண்டிருந்த ஓர் உருவம் ஆகும். அந்த உருவம் இசைக் கருவியை இயக்குபவர் ஒருவருடைய உருவம் என்பதை முதலில் சுவைட்சர் அறியவில்லை. போதகர் வழிபாடு செய்கிறபொழுதும் சொற் பொழிவு ஆற்றுகிறபொழுதும் அவ்வுருவம் மறைந்துவிட்டது என்றும், பிற நேரங்களில் அப் பேயின் உரு மேடைமீது தோற்றிற்று என்றும் அவர் கருதிக்கொண்டிருந்தார். போதகர் போவ தையும் வருவதையும் அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு இசை இசைப்பதற்காக அவருடைய இயக்கங்களைக் காணுதற்கென ஒரு கண்ணுடியைத் தம் எதிரே இசைஞர் வைத்திருந்தார். அந்தக் கண் டிையில் இசைஞருடைய தாடித்தலை வடிவம் சில நேரம் தென்படுதல் கண்டு, சுவைட்சர் அவ்வுரு