பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பல்கலைக் கழகம் ஸ்ேடிராஸ்பர்கு (Strasburg) Lists&då ægplē# திற் சுவைட்சர் சமயக் கல்வியும் மெய்ந்நூற் கல்வி யும் கற்பதற்காகப் புகுந்தார். சமயக் கல்வி கற்ப தென்பது அவருடைய பெற்ருேர் வழியாக அவ ருக்கு உண்டான ஆர்வம். பல்கலைக் கழகத்தில் அவர் படிக்கத் தொடங்கி ஓராண்டு ஆனபிற்பாடு, கட்டாயப் படைக்கலப் பயிற்சிக்காக அவர் பல் கலைக் கழகப் படிப்பை விடவேண்டிய நிலை ஏற்பட் டது. ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு, அவர் பல் கலைக் கழகத்திற்குத் திரும்பி வந்து, சமயக் கல்வி யைத் தொடர்ந்து கற்ருர். சிறப்பாக, ஏசுநாத ருடைய வரலாறுகளையும் வாக்குகளையும் பேரா ராய்ச்சியொடு கற்றர்.) (பல்கலைக் கழகத்திற்குச் செல்லுமுன் விடு முறையில் பாரீஸ் (Paris) நகரத்திற்கு ஒரு நாள் சென்ருர். அக்காலை விடார் (Widor) என்பார் ஒருவருடைய நட்பு அவருக்குக் கிட்டிற்று. விடார் சுவைட்சரைவிட வயதில் முப்பது ஆண்டுகள் மூத்தவர். எனினும், அந்நட்பு நவில்தொறும் நூல்நயம்போலப் பயில்தொறும் பெருகுவதா யிற்று. விடார் என்பவரோ சமய இசைப் பாடல்கள் அமைத்து, அர்ச். சல்பிஸ் (St. Sulpice) கோயி லில் இசைப்பவர். இவ்விருவருடைய நட்பும் இருநிலம் பிளக்கும் அளவு வேரூன்றிய பெருநட்பு ஆயிற்று.)