பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகம் 13 (ம்ாணவராய் இருந்தபொழுது, அவருக்கு உகந்த கொள்கைகள் அமைத்ததொரு பாட்டை அவர் பரவுவது வழக்கம்) அதனை அட்டையில் எழுதித் தமது அறையில் தொங்கவிட்டிருந்தார். 4 & മേക്മേക്മ மேன்மேலும் உயர்வன ஆகுக! மனக்கினிய களுக்களொடும் விருப்புக்களொடும் மேன்மேலும் மேன்மேலும் உயர்வன ஆகுக! நீ விரும்பி மனக்கொளும் குறிக்கோள் எல்லாம் மேன்மேலும் மேன்மேலும் உயர்வன ஆகுக! இடிவரினும் முகில்சூழினும் உயர்வன ஆகுக! நம்பிக்கை என்னும் இன்குெளி யிஞலே மேன்மேலும் மேன்மேலும் உயர்வன ஆகுக!” என்ற கருத்துடைய பாட்டை அவர்முன் எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு இருந்தார். (எவ்வாருவது, பிறர்க்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் அவர்பால் எழுந்துகொண்டிருந்த எண் ணம். ஒருவர் செல்வத்தையும் உடல் நலத்தையும் பிற வசதிகளையும் பெற்றிருக்கிருர் என்ருல், அவைதம்மிலிருந்து பிறருக்காகத் தரும்படி நிறையக் கேட்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் சுவைட்சர். அந்த நம்பிக்கையிலேயே அவர் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து படித்து வந்தார். சமயக் கல்வி, மெய்ந்நூற் கல்வி, இசைக் கல்வி ஆகியவற்றிற்காகப் பல்கலைக் கழகத்தில் அவர் ஒன்பது ஆண்டுகள் கழித்தார்.