பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பல்கலைக் கழகம் முப்பதாவது வயதுமுதல் வாழ்நாளில் எஞ்சும் பகுதி யெல்லாம் தம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உழைப்பது என்று முடிவு செய்துகொண்டார். அது எந்தவிதமான பணி என்பது மாத்திரம் அவருக்குப் புலப்படவில்லை. வீடு அற்றவர்கள், தாய்தந்தை அற்றவர்கள் ஆகிய குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்தல் கூடாதா என்று முதலில் அவர் எண்ணினர்; சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் களுடைய உள்ளத்தைச் சீர்ப்படுத்துதற்குச் சில வேளைகளில் முயன்ருர்) (சுவைட்சர் ஒன்பது ஆண்டுகள் பல்கலைக் கழகப் படிப்பிற் கழித்தார் எனினும், அவை எல் லாம் ஒர் இடத்திலேயே படிக்கப்பட்ட படிப்புக்கள் அல்ல. பல்கலைக் கழகத்திற் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆனவுடன் சமயத்துறையில் ஒரு பெருங்கட்டுரை எழுதினர். அப்பெருங் கட்டு ரையைப் பாராட்டி ஒர் உதவித்தொகை கொடுக்கப் பட்டது. அவ்வுதவித்தொகையைக் கொண்டு அவர் எங்கு வேண்டுமானுலும் பயணம் செய்ய லாம். அவர் செய்யவேண்டுவதெல்லாம் ஆறு ஆண்டுகளுக்குள் அப்பல்கலைக் கழகத்திற்குத் திரும்பி வந்து, சமயக் கல்வி போதிப்பதற்கு 2 slussuf (Licentiate in Theology) grgårp பட்டம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது. தான். சுவைட்சர் ஆறு ஆண்டுகளையும் பல தேசங்களிற் சுற்றிக் கழித்திருந்தால்கூடத் தடை செய்வார் இல்லை. அவ்வாறு செய்ய அவர்க்கு