பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகம் 15 உரிமை உண்டு. எனினும், ஆறு ஆண்டுகள் முழுதும் அவர் சுற்ருமல், முன்னரே தமது உதவித் தொகையை வேறு ஒருவர்க்கு அளிப்பதற் காக விட்டுக் கொடுத்தார். அவரைக் காட்டிலும் எளிய மாணவர் ஒருவர் அத்தொகையை நாடும் அளவிற்கு எளிமை உடையவராய் இருந்தமையா லும், அவர் விட்டுக்கொடுத்தால் அத்தொகை அம் மாணவர்க்கு கிடைத்தல் கூடும் என்று தெரிந்த மையாலும், சுவைட்சர் அதனை ஆறு ஆண்டுகட் கும் தமக்கு உரியதாக்கிக்கொள்ளாமல், முன்னரே விட்டுக்கொடுத்தார். அந்த உதவித்தொகையைக் கொண்டு முதலிற் பாரிசிற்குப் போய் நல்ல உழைப் பொடு மெய்ந்நூல் கற்றுக்கொண்டார் ; காண்ட் (Kant) என்ற மெய்ஞ்ஞானியைப்பற்றிப் பெரிய தொரு கட்டுரை எழுத எண்ணிஞர். மறுபடியும், விடார் என்ற நண்பரைக் காணுதற்கு வாய்ப்புக்கள் இப்பொழுது ஏற்பட்டன. அவரிடம் இசைக் கல்வியை மேலும் பெற்ருர், வேறு இரண்டு ஆசிரி யர்களிடமிருந்து பியானே பாடம் பயின்ருர். அவ்விரண்டு ஆசிரியர்களும் பியானேவில் இரு வேறு விதமாக வாசிக்கவேண்டும் என்று கருதி இருந்தார்கள்! இருவரும் இரு வேறு விதமாகவே கற்பித்தார்கள். எனினும், அந்தந்த ஆசிரியர் முன்னிலையில் வாசிக்கும்பொழுது அவரவர் கற் பித்த வண்ணம் தவருமல் வாசிக்கும் ஆற்றலைச் சுவைட்சர் பெற்றிருந்தார். விடார் சுவைட்சருக் குப்பாடம் கற்பித்த வேளைகளில்,செர்மன்மொழியி அள்ள பாக் (Bach) இசைப்பாடல்களைப்பற்றிச்