பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காட்டோரம் பாரீசிலிருந்து மூன்று வாரப் பிரயாணத்திற் குப் பிறகு, லாம்பரீன் (Lambarene) என்ற இடத்தை அடைதல்கூடும். அது ஒரு காட்டுப் பிர தேசம். அதனை அடைதற்கு ஒகோவே (Ogowe) என்னும் ஆற்றின் வழியாகச்செல்லுதல்வேண்டும். ஆற்றின் இருமருங்கும் பெருங்காடு உண்டு. மரங் களிலிருந்து குரங்குகள் தொங்கிக்கொண்டிருக்கும். புலிக்குட்டிகள் தாய்ப்புலியைத் தேடிக்கொண்டு திரியும். மரங்களின் தாள்களிலும் அடி வேர்களி லும் எத்துணையோ கொடிய விலங்குகள் மறைந்து கொண்டு இருப்பதுண்டு. அக்காட்டில் எங்கனும் முட்புதர்கள் மொய்த்த தரையும், கருங்கற்கள் நெருங்கிய இடமும் உண்டு. வானிடை ஒரு வானம் அடர்த்திருப்பதைப்போலப் பெரிய வண் கிளை மரங்கள் வீறுகொண்டு நிற்றலுண்டு. ஒகோவே ஆறு ஒரு சிற்குறு அன்று ; பல காட் டாறுகள் வந்துகூடும் ஒரு பேரியாறு. சில காட் டாறுகள் பெரிய ஏரி அளவு பரந்துபட்டவை. அந்தக் காட்டாறு வழியாகப் படகினை ஒட்டிச் செல்லுவோர் திறமை உடையவராய் இருத்தல் வேண்டும். அதன் ஆழத்தையும் அகலத்தையும் நன்கு அறிந்தவர்கள் படகினை இயக்க, டாக்டர் சுவைட்சரும் அவர் மனைவியும் அலெம்பெ (Alembe) என்ற படகினில் போய்க்கொண்டு இருந்தனர். * * - o