பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காட்டோரம் ஒகோவே ஆற்றினைக் கடப்பதற்கு முன்னர், அட்லாண்டிக் (Atlantic) கடலில் யூரோப் (Europe) என்ற கப்பலிற் சுவைட்சர் பாரீசி லிருந்து புறப்பட்டார். அப்பொழுது புயல் மூன்று நாள் வீசிற்று. அந்த மூன்று நாட்களும் பிர யாணிகளுக்கு ஓர் ஊழிக்காலம் போன்று இருந் தன. அவர்கள் வைத்திருந்த சாமான்களும் பெட்டிகளும் முன்னும் பின்னும் உருண்டு ஓடி மேல் விழுந்து அல்லல் விளைத்தன. அக்கடும் புயலில் உணவமைப்போர் நின்று பணியாற்ற முடியாது இடருற்ருர் ஆகலின், சுட்ட பண்டங் கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. புயல் நின்று அமைதி ஏற்பட்டபிறகுதான், பிரயாணிகள் ஒரு வரை ஒருவர் அறிந்துகொள்ள முற்பட்டனர். ஆப்பிரிக்காவிற் பன்னிரண்டு ஆண்டுகள் முன் னரே உழைத்திருந்தவர் ஆகிய இராணுவ மருத் துவர் ஒருவருடைய நட்பு சுவைட்சருக்குக் கிடைத்தது. அவரிடமிருந்து பல செய்திகளைச் சுவைட்சர் அறிந்துகொண்டார். ஆப்பிரிக்க மண்ணில் அமைந்த தக்கார் (Dakar) என்னும் துறைமுகத்திற் சில நாட்கள் கழித்து இறங்கியவுடன், ஆப்பிரிக்க மக்கள் மிருகங் களை எவ்வளவு கொடுமைப்பட நடத்திக்கொண் டிருந்தார்கள் என்பதை அவர் கண்டார். கோவேறு கழுதைகளும் குதிரைகளும் பட்டபாடு சொல்லில் அடங்காது. எலும்புக்கூடுகளொடு காணப்பட்ட குதிரைகள் பல சேணங்களின் இரு பக்கத்திலும் குருதி தோயும்படி அடிக்கப்பட்ட சாட்டையடி