பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டோரம் 27 கொண்டு அங்கே வந்திருந்தவர்கள். போட்டியில் வென்று முதலில் வந்தவர்கள் சுவைட்சரை அழைத்துப்போகும் உரிமை உடையவர்கள். வய தான மாணவர்கள் பிறகு வந்தவர்கள் ஆதலால், சுவைட்சரின் சாமான்களையே எடுத்துக்கொண்டு போதல் வேண்டும். சுவைட்சரையும் அவர் மனைவியையும் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு தம் தோணியில் ஏற்றி உரிய இடத்திற் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்கள். கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பரந்த மனப்பான்மையைச் சுட்டி ஒரு பாட்டிற் பாடினர். பழைய இந்தியாவில் ஒரு பகுதியாய் இருந்த சிந்து நதியிலே, நிலா நேரத்தில், சேரநாட்டு இளம் பெண்களுடன் அழகுத் தெலுங்கிற் பாட்டினை இசைத்துக்கொண்டு, படகுகள் ஒட்டி விளையாடி வரவேண்டும் என்று அவர் எண்ணினர். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறு ஒன்றனில் அல்லாமல், தம் இனிய தமிழ் மொழியில் அல்லாமல், தம்முடைய எழில் நிரம்பிய இளமங்கையருடன் அல்லாமல், பிறநாட்டு ஆற்றில் பிறிதொரு மொழியிற் பாட்டு இசைத்துக்கொண்டு பிறநாட்டு மகளிரொடு இனிமையாகச் செல்ல வேண்டும் என்று களுக்கண்டர்ர். சுவைட்சரோ பிறிதொரு நாட்டின்கண் உள்ள ஆற்றில், பிறிதொரு நாட்டு இளைஞர்களுடன், பிறருக்கு உழைக்கும் நோக்கத்துடன் வினைமேற் சென்ருர், சுவைட்சர் அப்படகிற் சென்ற செய்தியை நினைக் கும்பொழுது, பாரதியார் 'பாடலிற் கூறப்பட்ட 4450–3 -