பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டோரம் 29 பார்த்தற்குச் சுவைட்சர் தக்க செல்வாக்கு நாட வேண்டியவர் ஆயினர். பாரீஸ் நகரத்தில் இருந்த அவருடைய நண்பர்கள் உதவியினுல் ஒரளவு திருப்தியாகச் சுவைட்சருடைய நிலை முடிவு செய்யப்பட்டது. எனினும், சமயம்பற்றிய அவ ருடைய சீர்திருந்திய நோக்கங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த சங்க அதிகாரிகள் சிலர் லாம்பரீன் மருத்துவசாலையில் அவர் வேலை பார்ப் பதற்குத் தடையாக இருப்பார்கள் போலக் காணப் பட்டார்கள். சுவைட்சரோ துயருறும் மக்களைப் பாதுகாக்கச் செல்வதே தமது நோக்கம் என்ப தாகவும், தம்முடைய பணிகளை மருத்துவ அள வொடு நிறுத்திக்கொள்வதாகவும் உறுதி அளித் தார. இவ்வாறு, அவர் அக்காட்டோரத்தின்கண் பேரியாற்றங்கரையில் அமைந்துநின்ற குன்றி லிருந்து குன்ருத தொண்டாற்றத் தொடங்கினர். பக்கத்தில் உள்ள இரண்டு குன்றுகளில் ஒன்றின் மீது ஆண்கள் பள்ளிக்கூடமும், மற்ருென்றின் மீது பெண்கள் பள்ளிக்கூடமும் உண்டு. அந்த இடத்தின் அண்மையிற் காரினும் இருண்ட காடு உண்டு. ஏறத்தாழ நூறு அடி உயரம் சுவர்போல வளர்ந்து எழுந்த காடாக அஃது இருந்ததால், காற்றுக்கூட உள்ளே நுழைவது கடினம் என்ற வாறு இருந்தது. அந்தக் காட்டகத்தே எத்தகைய கொடிய விலங்குகள் இருந்தன என்பது சொல்லு தல் இயலாது. கொடிய விலங்குகள் பல உண்டு என்று மட்டும் கருதினர் ேேராப்பியர். பழங்குடி