பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காட்டோரம் ஆப்பிரிக்கரோ அந்தக் காட்டிற் பேயும் பைசாச மும் உண்டு என்று கருதி, அஞ்சி அஞ்சிச் செத் துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆப்பிரிக்கரை அடிமையாக விலைக்கு வாங்கிக்கொண்டு போகும் பழக்கம் இருந்தமையால், எட்டுவிதக் குடியினராய் இருந்த ஆப்பிரிக்கர்கள் இரண்டே விதமான குடி யினராய்க் குன்றிக்கொண்டிருந்தனர். கலோ (Galoas) 5rsörg)IIổ, Li#o-et#laỗr (Pahouin) 5T3ồrg)uổ உள்ள இருவிதமான திசைமொழிகள் பேசும் பெருங்குடி மக்கள் ஆகி அவர்கள் வாழ்ந்து வந்தார் கள் , மண்வீடுகளிற் சிலரும் மரவீடுகளிற் சிலரும் ஆக வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத் தார்க்கும் உரிய நிலப்பரப்பில் வாழையையே அவர் கள் பயிரிட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வாழைத்தோட்டம் புதுப்பிக்கப்படும். மரங்களை வைத்தல் ஆடவர் கடமையாகவும், வாழைக் கன்றுகளை நட்ட பிற்பாடு அவற்றை ஒம்புதல் மகளிர் கடமையாகவும் மதிக்கப்பட்டன. அந்தக் காட்டோரத்தில் உள்ள வெப்பநிலை மிகவும் கடுமையானது. வியர்த்து விறுவிறுக்க, அங்கே உழைப்பதற்கு முன்வந்தார் சுவைட்சர்.