பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 4. துயர்ப்படுவோர் நடுவே சுவைட்சர் லாம்பரீனில் முதற்கண் நான்கு ஆண்டுகள் தங்கித் துயருற்ற நீக்ரோக்களின் இடுக்கண் களையத் தலைப்பட்டார். லாம்பரீனில் முன்னரே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ நிலையம் ஒரு சிறு கோழிச்சாவடியில் இருந்தது. இரண்டு வாரங்களில், ஒன்றன்பின் ஒன்ருகச் சில அறைகள் கட்டப்பட்டன. நாடொறும் சுவைட்சர் ஏதாவது ஒரு விதத்தில் மருத்துவ மனையின் வளர்ச்சிக் காக உழைத்துக்கொண்டே இருந்தார். அவரே பல நேரங்களில் மரங்களை வெட்டியும் கற்களை அகழ்ந்தும் வேலை செய்தார். கற்பிளந்து மலை பிளந்து கனிகள்வெட்டி அவர் கைகள் காழ்த்தன. ஆப்பிரிக்காவில் உள்ள வேலைக்காரர்கள் மருத்துவ மனேபோன்ற மனைகளின் வேலைக்குக் கிடைப்பது அருமையாய் இருந்தது. காரணம், உயர்ந்த கூலி கொடுத்து, மர வணிகர்கள் அவர்களை வேலைக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பது. அதனல், பல குடிசைகள் சுவைட்சர் கையாலேயே கட்டப்பட்டன. நீக்ரோ மக்கள் பிறர் நலக்திற் காகத் தாம் எதற்காக உழைப்ப்து என்று கேட்கக் கூடிய நிலையில் இருந்தனர்; தமக்காகவோ தம் குடும்பத்தார்க்காகவோ என்ருல், மருத்துவ நிலைய வேலைகளில் ஈடுபடுதற்கு இணங் கினர்; அல்லாத பிறர்க்காக உழைப்பதற்குக் கூசினர். மேலும், இயற்கையொடு வேறு சுவைட்