பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 துயர்ப்படுவோர் சர் போராட வேண்டியவராய் இருந்தார். தாவர இயற்கைப்பொருள்கள் விலங்கின் இயற்கைப் பொருள்கள், புழு பூச்சி ஆகிய இயற்கைப்பொருள் கள் முதலியவற்ருெடு போராடவேண்டிய நிலையில் அவர் இருந்தார். இந்தத் தொல்லைகளின் நடுவே டாக்டர் சுவைட்சர் மாலை நேரத்தை இசையிற் போக்குதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர் பாரீசிலிருந்து புறப்பட்டு வருவதற்கு முன் குல், பாரீஸ் பாக் சங்கத்தினர் பியானே ஒன்று அமைத்து நன்கொடையாகத் தந்திருந்தனர். காலி ல்ை இயக்கி வாசிக்கக்கூடிய வகையில் அது அமைந்திருந்தது. அதுதான் லாம்பரீனில் அவ ருக்கு ஒய்வுநேரப் பொழுதுபோக்காக அமைந்தது. முதல் ஒன்பது மாதங்களுக்குள்ளாக, ஏறத் தாழ இரண்டாயிரம் பேர்கள் அம் மருத்துவ மனை யிற் சிகிச்சை பெற்றனர் என்ருல், நோய்வாய்ப் பட்டோர் பலர் உண்டு என்பதையும், அவர்களுக்கு மருந்து நிரம்ப வேண்டியிருந்தது என்பதையும் எளிதில் அறிதல் இயலும். தம்முடைய மனைவி ஆணேசெய்ய, திறந்த வெளியிலே சுவைட்சர் சிலரைச் சுட்டறுத்தார். இந்த இரண சிகிச்சை கள் வெற்றியுடையனவாக இருந்தமையின், அவ ருடைய புகழ் விரைவில் அங்குப் பரவியது. நீக்ரோ மக்களோ மனிதனுடைய மாய வித்தைகளை நம்பு பவர்கள் ஆகையால், இறந்துபோனவர்போற் கிடந்த நோயாளர்கள் பலர் எழுந்து நலம் எய்தி யதைக் கண்டவுடன், டாக்டர் சுவைட்சரை மாய வித்தைக்காரர் என்று சொல்லத் தலைப்பட்டனர்.