பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர்ப்படுவோர் 35 யிடத்தைச் செப்பனிட வேண்டியவர் ஆயினுர்கள். அந்த அந்த நிலப்பகுதியின் அளவு நான்கு மூலை யிலும் குச்சிகள் நடப்பட்டு, மரத்தைக்கொண்டு படுக்கைகள் அமைக்கப்பட்டன. மரக்கட்டையின் மீது காய்ந்த புல்லைப் பரப்பியதும், படுக்கையின் மேல் மெத்தை விரித்ததுபோன்ற காட்சி தோற் றிற்று. இவ்வாறு, அதிக காசு பணச் செலவின்றி விரைவில் நோயாளர்களுக்கு உரிய படுக்கையிடங் கள் செம்மையாயின. நோயாளர்களைக் கீழே படுக்கவைத்துவிட்டு, பார்க்க வந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் படுக்கையிற் படுத்து 'விடாமற் பார்த்துக் கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு சுவைட்சருடையது ஆயிற்று. அங்கே வந்துசேர்ந்த நோயாளிகளிற் சிலர் மலேரியா காய்ச்சலால் அல்லது குட்ட நோயால் வருந்தினர். வேறு சிலர் வயிற்றுக்கடுப்பு நோய் உடையவராய் இருந்தனர். குடல் வாதத்திலுைம், யானைக்காலிஞலும், மகோதரத்தினுலும் பலர் வருந்திக்கொண்டிருந்தனர். நச்சுப் பண்டங்களைத் தின்பதாலும், புகையிலைச் சாற்றைக் குடித்து விடுவதாலும் சிலர் பைத்தியம் பிடித்து வருந்திக் கொண்டிருந்தனர். எனினும், அங்கே புற்று நோயிலுைம் குடல் அநுபந்தத்திகுலும் வருந்திய நோயாளர்கள் மாத்திரம் இல்லை. உறங்கும் நோயி குலும் வருந்தியவர் பலர். அந்நோய் ஒரு தொத்து நோய் ஆனதால், அந்நோயினுற் பீடிக்கப்பட்ட வரைப் பிரித்து, தனியாக வைத்துப் பாதுகாப் பதற்கு உரிய இடவசதி. உண்டாகவில்லை.