பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 துயர்ப்படுவோர் எனினும், சுவைட்சரும் அவர் மனைவியும் தம்மால் இயன்றதைச் செய்து வந்தனர். நோயாளிகளிற் சிலர் நோயினின்று விடுபட்டவுடன் 'நோய் தீர்ந்தது, நோய் தீர்ந்தது. மகிழ்ச்சி, மகிழ்ச்சி' என்று சொல்லி மருத்துவ மனையினின்று வெளி யேறியதைக் கண்ட சுவைட்சருக்கு உள்ளம் குளிர்ந்தது. ேேராப்பா கண்டத்திற் பிறந்த வெள்ளைச்சாதியார் ஆகிய அவர் ஆப்பிரிக்கா கண்டத்திற் பிறந்த கறுப்புச் சாதியார் பக்கத்தில் நின்று, பின்னவர்களுடைய இடுக்கண்களைப் பொடியாக்கிய திறத்தை எண்ணும்பொழுது, 'யாதும் ஊரே யாவருங் கேளிர் ' என்ற தமிழ்ப் புலவர் பூங்குன்றனருடைய பொன்னுரை நினை விற்கு வருதல் இயல்பு.