பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 5. போர்க்காலம் 1914-இல் வல்லரசுகளுக்கு இடையே மூண்ட ஒரு போர் சுவைட்சருக்குப் பெருந் தொல்லையைத் தந்தது. பிரஞ்சுநாடும் செர்மானிய நாடும் ஒன்றுக் கொன்று எதிராக இருந்த காரணத்தால், அமைதி யாக மருத்துவ வேலை பார்த்துவந்த சுவைட்சரைக் கூட இந்தப் போர் தொட்டது. சுவைட்சர் செர்மா னிய குடிமகளுர் என்பதே காரணம். பிரஞ்சுக் காரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்த செர்மானியர்களை யும் கொடுமைப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆகஸ்டு சிந்தாம் தேதி சுவைட்சரும் அவர் மனைவியும் சிறைப்படுத்தப்பட்டார்கள். அச்சிறை அவர் தம் வீட்டிற்குள்ளேயே தங்கி இருக்க வேண்டிய சிறை ஆயிற்று. தம் வீட்டினுள்ளேயே இருந்து பிறர் எவரோடும் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுப் பாதுகாப்பில் அவர்கள் வைக்கப்பட்டார்கள். உள்ளிருந்த படியே சமயம், தத்துவம், இசை ஆகியவற்றிற் சுவைட்சர் ஈடுபடுவாராயினர். மருத்துவ மனைக் குக்கூட அவர்கள் செல்லுதல் கூடாது எனத் தடைப்படுத்தப்பட்டிருந்தனர். அதனுல், சுவைட் சர் அர்ச். பால் என்பவரைப்பற்றிய புத்தகத்தை எழுதத் தொடங்கினர். லாம்பரீனைச் சுற்றிப் பல நாழிகை வழிக்கு அவர் ஒருவரே மருத்துவர். அவர் மருத்துவ வேலை யைச் செய்ய முடியாமல் தடைப்படுத்தப்பட்டதை