பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 53 மருத்துவ மனையில் இருந்தாலும், விரிவுரை ஆற்றுதலிலும், இசையரங்குகள் நடத்துதலிலும், புத்தகங்கள் எழுதுதலிலும் சுவைட்சர் ஈடுபடுவா ராயினர்; ஸ்வீடன், டென்மார்க்கு முதலிய தேசங் களுக்குச் சென்ருர், பல தேசங்களிலிருந்தும் லாம்பரீன் மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்த நன்கொடைகளை ஏற்றுக்கொண்டு லாம்பரீனுக்கு அனுப்புவதற்கு உரிய தலைமையிடமாக ஒன்றினை ஸ்டிராஸ்பர்க்கில் அமைத்துக்கொண்டார். எம்மி torjią sår (Emmy Martin) GT sårp Siôsouduurf இந்த வேலையை நன்ருகக் கவனித்து அவர்க்கு உதவிஞர். சுவைட்சரின் மேசைக் கால்கள் இரு மருங்கிலும் இரண்டு சாக்குகள் கட்டப்பட்டிருந் தன. ஒரு பக்கத்துச் சாக்கில் பதில் எழுதப்பட்ட கடிதங்களும், மற்ருெரு பக்கத்துச் சாக்கில் பதில் எழுதப்படாது கிடக்கும் கடிதங்களும் இருக்கும். உலகம் எங்கணும் இருந்து அவர்க்குக் கடிதங்கள் வந்தவண்ணம் இருந்தன. கீதே (Goethe) என் பவரைப்பற்றி அவர் செய்த அரிய சொற்பொழிவு களுக்காக அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை யிலிருந்து கன்ஸ்பாக்கில் ஒரு வீடு கட்டினர். அந்த வீடு அவர்க்குரிய வீடாக மாத்திரம் இருந்த தில்லை. லாம்பரீனுக்குச் செல்லும் மருத்துவ உதவி யாளர்களும், அங்கிருந்து திரும்பும் உதவியாளர் களும் வழியில் தங்கிப்போகும் ஓர் அற நிலையமாக வும் அவ்வீடு இருந்தது. அந்த வீட்டினைக் கட்டு தற்காக கீதே சொற்பொழிவுப் பரிசுத் தொகையை அவர்'பயன்படுத்துதற்கு முன்னல், அதனை ஒத்த