பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மன்னுயிர்க்கு அன்பு தொகையைத் தம்முடைய பிற சொற்பொழிவுகளி லிருந்தும் இசையரங்குகளிலிருந்தும் சேகரித்துச் செர்மானிய அற நிலையங்களுக்காகத் தந்துவிட் டார். அதன் பிறகுதான், கீதே பரிசுத் தொகை யைப் பயன்படுத்திக் கீதே என்பவரின் பெயரால் வீட்டினைக் கட்டி அமைத்துக் கொண்டார். கீதே என்றும் செர்மானிய கவிஞரைப்பற்றி ஆற்றிய விரிவுரைகள் காரணமாகக் கிடைக்கப்பெற்ற பணத் தினுல் அவ்வீடு கட்டியமையின், அதனைக் கீதே வீடு' என்று சொல்வது அவர் வழக்கம். செகோஸ்லோவாகியா, செர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய தேசங்களில் அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. அந்தத் தேசங்களி லுள்ள நண்பர்கள் பலர் மருத்துவ மனையின் வளர்ச்சிக்காகப் பெருங்கொடைகள் அளித்தனர். சல்வியார் ஒருவர் தமது விலையுயர்ந்த பதக் கத்தை விற்று ஒரு கட்டிடத்திற்காகத் தந்தார். fy。 அந்தக் கட்டிடம் பதக்கக் கட்டிடம் என்ற பெயரிற் கட்டப்பட்டது. லண்டனில் மகளிர் மூவர் " ஆற்று வீடு' என்ற ஒரு வீட்டை லாம்பரீன் மருத்துவ மனையின் உறுப்புக்களில் ஒன்ருகக் கட்டி அமைப்

á பதற்காக நிதியம் தந்தனர். பைத்தியம் பிடித்த நோயாளர்களைத் தனியே வைத்துப் பாதுகாப்ப உதவியால் தோண்டப்பட்டது. சிலர் நல்லொளி விளக்குகள் வைப்பதற்குப் பணம் உதவினர்.