பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 55 1929-இல் மறுபடியும் சுவைட்சர் தமது மனைவி யோடு ஆப்பிரிக்கா சென்ருர். லாம்பரினில் மன் னுயிர்ப் பணியில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். முன்னர்ச் செய்த வேலையைக் காட்டிலும் இரு மடங்கு வேலைகள் இப்பொழுது செய்யப்பட்டன. தம்முடைய வாழ்க்கை வரலாற்றை அவரே எழுதி குர். அது செர்மன் மொழியிலும் ஆங்கில மொழி யிலும் 1931-இல் வெளியிடப்பட்டது. பிராங்கு பர்டு (Frankfurt) என்ற இடத்தில் 1932 மார்ச்சு 2-ஆம் தேதி கவிஞர் கீதேயைப்பற்றி அவர் அரிய விரிவுரையாற்றினர். கேட்க வந்திருந்த கூட்டத் தினரை நோக்கி, ஒவ்வொருவரும் தத்தமது ஆன் மாவைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய அவசி யத்தை வற்புறுத்தினர். ஒவ்வொரு மகனும் ஒவ் வொரு மகளும் சிந்தித்து ஆய்தல் வேண்டுமென் றும், அதே நேரத்தில் அறிவினைச் செயற்படுத்து பவராக இருக்கவேண்டுமென்றும் நன்ருக எடுத் துக்காட்டினர். மனம் சென்ற சென்ற இடங்களில் அதனை விட்டுவிடுதல் ஆகாது எனவும், தீயதி னின்று நீக்கி நல்லதன்கண் அதனைக் கொண்டு செலுத்துதல் வேண்டும் எனவும் வற்புறுத்தினர். ' சென்ற இடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்ற பொய்யாமொழி எல்லா நாடுகளுக்கும் ஒத் தது அன்ருே? மனம் போன இடத்தில் அதனை விட்டிடாமல், தீதினின்று நீக்கி, நல்லதன்கண் அதனைச் செலுத்துதல் அறிவிற்கு அழகு என்ற