பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மன்னுயிர்க்கு அன்பு திருவள்ளுவர் கருத்து எக்காலத்திற்கும் பொருந்து வது ஒன்றன்ருே ? கீதே மக்கள் பிறரையும் தம்மைப்போல ஒவ் வொருவரும் கருதவேண்டும் என்று எண்ணியவர் ஆனதாலும், மக்களினத்தார்க்குச் சிறந்த தொண்டு ஆற்றியவர்க்கு அப்பரிசு வழங்கப்படு வது என்பது விதி ஆனதாலும், சுவைட்சர் அவ் வாறு பேசியது மிக்க பொருத்தம் உடையதாகும். 1932-இல் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து முத லிய தேசங்களுக்கு விரிவுரை ஆற்ற அவர் சென்ருர். உலகச் சமயங்களை ஒப்பு நோக்கி, சிறப்பாக இந்தியக் கொள்கைகளையும் ஆசியக் கொள்கைகளையும் ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுத அவர் முடிவு செய்துகொண்டார். 1933-இல் மறு படியும் லாம்பரீனுக்குப் போய் ஒன்பது மாதங்கள் அங்குப் பணியாற்றிவிட்டுத் திரும்பவும் 8ரோப்பா விற் சொற்பொழிவுகளுக்காக வந்தார்; ஆப்பிரிக் காவில் இப்பொழுது போனபொழுது புதுப்புதுக் குடிசைகள் கட்டினர்; மருத்துவத்திற் புதுவதாக ஏற்பட்டிருந்த வளர்ச்சிகளையொட்டி லாம்பரீன் மருத்துவ மனையிலும் சிற்சில சீர்திருத்தங்கள் செய்தார். - - 1934-இல் எடின்பரோ பல்கலைக் கழகம் அவ ருக்குப் பேரறிஞர் பட்டம் தந்தது. 1935-வது ஆண்டில், அவருடைய அறுபதாவது ஆண்டு நிறைவு நிகழ்ந்தபொழுது, நூற்றுக் கணக்கான நண்பர்கள் நேரில் வந்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர்கள் ; ஆயிரக் கணக்கான கடிதங்களும்