பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மன்னுயிர்க்கு அன்பு மாக எந்தத் தீமை விளைந்தாலும், நோயில்ை ஆப்பிரிக்காவில் உழந்துகொண்டிருக்கும் மக்கள் எவ்வாற்ருலும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தால் துடுமென மீண்டும் சென்று விட்டார். சென்றவர் ஏறத்தாழப் பத்து ஆண்டு கள் மன்பதைத் தொண்டு ஆண்டே செய்து மகிழ்ந் தார். ஆப்பிரிக்கா தேசங்கூட போருக்குரிய பகுதி யாகக் கருதப்பட்டது. எனினும், இருதிறத்தாரும் லாம்பரீன் மருத்துவ நிலையத்தை மாத்திரம் தொடாது விட்டுவிட்டார்கள். சுவைட்சரின் மனைவியார் போரின் இடைக்காலத்தில் லாம்பரீன் மறுபடியும் வந்து சேர்ந்தார். வரும்பொழுது அவர்தம் மகள் ரீனுவும் உடன் வந்ததுபற்றிச் சுவைட்சருக்குப் பெருமகிழ்வு உண்டாயிற்று. அமெரிக்க தேசத்திலிருந்து மருத்துவ நிலையத் திற்குக் கிடைத்த பொருளுதவியால் மருத்துவ நிலையம் தளராது முழுத் தொண்டு ஆற்றுதல் இயலுவதாயிற்று. 1945 சனவரியில், அவருடைய எழுபதாவது ஆண்டு நிறைவு லாம்பரீனிற் கொண் டாடப்பட்டது. 1945 மே 7-ஆம் தேதி ேேராப்பாவிற் போர் நிறுத்தப்பட்டது என்ற செய்தி அவர் காதில் விழுந்தது. போர் நின்றுவிட்டது என்ற செய்தி வானுெலி வழியாகக் கேள்வியுற்ற வெள்ளையர் நோயாளர் ஒருவரால் அவர்க்கு அறிவிக்கப்பட்ட தாயினும், அதனைப்பற்றி அவர் உடனே சிந்திக்க வில்லை. காரணம், அன்று அஞ்சற் கட்டிற்கு உடனே செல்லவேண்டிய கடிதங்களை அவர்