பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 59 எழுதிக் கொண்டு இருந்தமையும், இருதய நோயா ளர்களை உடனே கவனிக்கவேண்டி இருந்தமையும் ஆம். முடங்கல்களை வரைந்து அனுப்பிவிட்டு, உடன் கவனிக்கவேண்டிய நோயாளர்களைக் கவனித்துவிட்டுப் போர் நிறுத்தத்தைப் பற்றி அமைதியாகச் சிந்திக்கத் தலைப்பட்டார் அக்கரும வீரர். போர் நின்றது என்ருல், எத்துணை இலட்சக்கணக்கான மக்கள் நன்ருக உறங்குதல் இயலும் என்று அப்பொழுதுதான் கருதினர். போர் நடந்துகொண்டிருந்த ஆண்டுகளிற் பிறந்த குழந்தைகளும் பெற்றேர்களும் என்று குண்டு விழுமோ, எங்குக் குண்டு விழுமோ என்று அஞ்சியஞ்சி, உறக்கம் இல்லாமல் இரவு பகல் தவித்தவர்கள் இப்பொழுது நன்ருக உறங்குதல் கூடும் என்று நினைத்து அப்பேரறிஞர் மகிழ்ந்தார். லா-தசே (Lao-Tse) என்ற சீன அறிஞர் ஒருவருடைய புத்தகம் ஒன்றினை எடுத்து உடன் புரட்டினர். கி. மு. ஆளுவது நூற்ருண்டில் வாழ்ந்த அச்சீன அறிஞர் போரைப்பற்றிக் கூறி யிருந்த இடம் அவரது நினைவிற்கு வந்தது. அந் தப் பக்கத்தை எடுத்தார். ' போரில் வெற்றி கண்டவர்கள் வெற்றி காரணமாக மகிழ்வார்கள் எனின், மக்கள் கூட்டத்தினரை வதைத்தோமே என்று நினைத்து மகிழ்வார் ஆதல் வேண்டும். போரில் வெற்றி என ஒன்று கொண்டாடப்படு கிறது என்ருல், வென்றவன் சுடுகாட்டு விழா ஒன்ற னில் இருப்பதுபோலத் தன்னை எண்ணிக்கொள்ளு தல் வேண்டும். போரிற் பல மனிதர்கள் கொல்லப் 4450–5