பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வயது முதிர்ந்த நிலையில் வயது முதிர்ந்த நிலையிலும் சுவைட்சர் மக் களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற ஆர்வம் உடையவராகவே இருந்து வருகிருர். 1958 சனவரி 14-ஆம் தேதி அவருடைய எண்பத்து மூன்ருவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்பொழு தும் அவர் ஆற்றலொடும், பேரன்பொடும், இரக்க உள்ளத்தொடும், செயலாற்றும் திறமையொடும் காணப்பட்டார். அவர் வாழ்நாளிற் பெரும்பான் மையான பாகம் அற்ருர்க்கு ஒன்று ஆற்றுவதி லேயே கழிந்துள்ளது. 1955 அக்டோபரில் அவரை இங்கிலாந்து தேசத்திற்கு வரவழைத்து எலிசபெத் பேரரசி சிறந்ததொரு பட்டம் (Order of Merit) அளித்தார். அவருடைய பருத்த தோளும், முனைத்த மூக்கும், செழித்த மீசையும், வளையாத தலைமயிரும், அமர்த்த கண்களும் அவருடைய செயற்றிறமையினையும் அஞ்சா நெஞ்சினையும் இளகிய உள்ளத்தினையும் புலப்படுத்துகின்றன. அவருடைய கைகள் பெரிய, கைகள்; அவை வலிமையையும் நுட்பத்திறனையும் காட்டுகின்றன. பேணுவாய் இருந்தாலும், கத்தியாய் இருந்தாலும், அக்கையில் எடுத்தவை கட்டாயம் வெற்றியுறும் என்பதை அக்கைகள் காட்டிக் கொண்டிருக்கின் றன என்று நேரே கண்டறிந்தவர்கள் சொல்லுகின்