பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மன்னுயிர்க்கு அன்பு களுக்குமேல் இருக்க விடப்படுதல் இல்லை. ஒவ் வொரு வீட்டின் முன்புறத்திலும் காற்ருேட்டமான இடைவெளி உண்டு. ஒவ்வொரு அறையின் பின் புறத்திலும் நோயாளர்கள் தத்தமக்கு வேண்டிய உணவினைச் சமைத்துக் கொள்ளுதற்கு உரிய சமையல் அறை உண்டு. ஆப்பிரிக்கர்கள் தாமே சமைத்து உண்ண விரும்புவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தமையின், மருத்துவ மனை அவர்களுடைய சொந்த வீடுகள்போல இருக்கும் படி அவர் ஏற்பாடு செய்துதந்தார். அல்லாது போனுல், பின்னர் விரைவில் வீட்டு எண்ணம் உண்டாகி, நோயாளர்கள் வீட்டிற்கு ஓடிவிடுவார் கள் என்று கருதினர். இவ்வாறு மன்னுயிர்ப் பணி தொடர்ந்து செய்யப்படுவதாயிற்று. உலகிற் சாதிகள் இரண்டு என்றும், ஒரு சாதி யினர் மன்பதைகட்கு உழைப்பவர் என்றும், மற் ருெரு சாதியினர் தமக்காகவே வாழ்ந்து திரிபவர் என்றும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை கருதி ஞர். அதனல்,

  • மன்னுயிர்க் காக முயல்பவரே-இந்த மாநிலத்து ஒங்கும் குலத்தினராம்; தன்னுயிர் போற்றித் திரிபவரே-என்றும் தாழ்ந்த குலத்திற் பிறந்தோர் அம்மா !” என்று பாடினர். தமக்காக அன்றி மன்னுயிர்க் காக உழைத்த சுவைட்சர் ஒங்கிய பெருங்குலத் திற்கு உரியவர் என்பது தேற்றம்.