பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 61 மகளிர் சிறுவர்களுக்கு எனப் புதுவதாக ஒரு தனிக் கிராமம் அமைத்து, அவ்விடத்தில் அந் நோயாளர்களை வைத்துச் சிகிச்சை செய்ய அவர் ஏற்பாடு செய்தார். அங்கம் குறைந்து அழுகு தொழுநோயர் பலர் அவருடைய பெருநோய் மருத் துவ மனையில் வந்து சேர்ந்தனர். 1950-இல் ம்ே பது பேராக இருந்த நோயாளர்களின் எண் ணிக்கை 54-இல் நானூறு வரை எட்டிப் பார்த்தது. பெருநோயைத் தீர்ப்பதற்கு மருந்து இல்லை யென்று சிலர் கருதினர்கள் என்ருலும், புது மருந்துகள் சில சல்போன் (Sulphone) போன் றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதலால், அவற் றைக் கொண்டு நான்கு அல்லது ந்ேது ஆண்டு கள் முதலிலேயே சிகிச்சை செய்தால், அந்நோ யினை அகற்றிவிடுதல் கூடும் என்பதில் சுவைட்சர் நம்பினர். எனவே, குட்ட நோயினருக்கெனத் தனியாக மருத்துவ மனை அமைத்து அவர்களுக்கு உதவிசெய்யத் தலைப்பட்டார். பெருநோயினரைக் காணக்கூடக் கண்கூசி, மக்கள் ஒதுக்கித் தள்ளி விடுவது வழக்கம். அவ்வாறு கதியற்ற எத் துணையோ பேர் சுவைட்சர் மருத்துவ இல்லத்தில் நன்ருகக் கவனிக்கப்பட்டனர். அத் தனி மருத் துவ இல்லத்தின் அங்கங்களாகச் செயற்கூடம், கட்டுக்கூடம், இரண சிகிச்சை செய்யும் இடம் முதலியனவும், ஏழு அல்லது எட்டுப் பெரும் வீடு களும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் சிறிய சிறிய அறைகள் பல உண்டு. ஒவ்வோர் அன்றயிலும் இரண்டு அல்லது மூன்று நோயாளர்