பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வயது முதிர்ந்த நிலையில் விரும்புவார்களானல், தம்முடைய உறைவிடத் திற்கு அவர்களைச் சுவைட்சர் அழைத்துப் போவார். அங்கே அவர் படிப்பதற்கும் உறங்கு வதற்கும் ஆக அமைந்த ஓர் அறை உண்டு. கொசு வலையொடு கூடிய ஒரு படுக்கை அங்கே காணப் படும். திண்டு போட்டுக் கொள்ளாமலே அவர் மரப் பலகைமீது எழுபது வயதுவரையில் உட் கார்ந்து வேலைபார்த்தவர் என அறிகின்ருேம். பிறகு ஒரு பஞ்சுமெத்தையை மரப்பலகையிற் சேர்த்துக் கொண்டுள்ளார். அ வ் வ ைற யி ல், தோட்ட வேலைகளுக்கு உரிய கருவிகளும், பிற கருவிகளும் ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருத்தலை ஒருவர் காணுதல்கூடும். பக்கத்து அறையில், அவர்க்கு இனிய அருங்கலமாக அமைந்த பியானே இசைக்கருவி உண்டு. சில நேரம் அவர் இள மான் குட்டிகளொடு விளையாடுதல் உண்டு. | இரவு எட்டரை மணியளவில் ஒரு மணி அடிக் கப்படும். அது ஊர் அடங்க வேண்டும் என்பதை அறிவிப்பது. அம்மணியோசையைக் கேட்டவுடன் யாவரும் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்கச் சென்றுவிடுவர். ஆனல், எட்டரை மணிக்குமேல் தான் சுவைட்சர் ஏதாவது வேலையைக் கவனிப் பார். நோயாளர்களுக்குக் கடுமையாக நோய் இருப்பின், அந்நாளில் அவர் ஒன்றும் எழுதுதல் இல்லை. அவர் பெரும்பான்மையான நாட்களில் இரவிற் பன்னிரண்டுமணி வரையில் வேலைபார்த்து வருதல் வழக்கம். அவர் படுத்துக்கொள்ளச் செல்லு தற்கு முன்னுல், ஒவ்வொரு நோயாளியும்