பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயது முதிர்ந்த நிலையில் 73 சுவைட்சருக்கு மதிப்புக் குறைவு என்பது அச் சொற்பொழிவினல் வெளியாகியுள்ளது. 'நம்ம்ைப் போலவே உயிர்கள் அனைத்தும் இன்பத்தை நாடுகின்றன; துன்பத்தால் வாடு கின்றன; வாழ்வதை விரும்புகின்றன ; சாவதை வெறுக்கின்றன. ஆதலால், மன்பதைகளிடத்துச் சிறந்த அன்பினைக் காட்டவேண்டிய கடமைபடித்த அறிஞர்களுக்கு உண்டு என்று அவர் கருதினர். உயிர்களைக் காப்பதற்காகப் பிற பல உயிர்களைக் கொல்லுதல் ஆகாது என்று சுவைட்சர் எண்ணி ஞர். முன் ஒரு காலத்தில் ஓர் உயிரைப் பாது காக்கச் சில உயிர்களைக் கொல்லலாம் என்று நம்பிக்கொண்டிருந்தவர்அவ்வெண்ணத்தை வயது முதிர்ந்த காலத்தில் மாற்றிக் கொண்டார். ஒருவர் தம் மனம் போனவாறு ஒன்றைக் கொல்வதும் விடுவதும் அறம் என்று சொல்லுதல் பொருந்தாது என்று கூறத் தலைப்பட்டுவிட்டார். எப்பொழு தாவது எவ்வுயிரையாவது கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்ருல், அவ்வாறு செய் கிறேனே என்று நினைத்து ஒருவரது உள்ளம் பதற வேண்டும் என்று சொல்லியுள்ளார். செய்த தவறுக் காக உள்ளம் நைந்துருகி அழவேண்டுமென்று கூறியுள்ளார். அழுகிற அதே நேரத்திற் பிற உயிர் களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யக்கூடிய வாய்ப்பு கிட்டுமெனின், அதனை விட்டுவிடாது பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்தி யுள்ளார். அவ்வழியில்தான் செய்த தவறுக்காக ஒருவர் மன்னிக்கப்படுகல் கூடும் என்று அவர்