பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வயது முதிர்ந்த நிலையில் இயலாததைச் செய்து முடிப்பதற்கு அறம் இடம் தரவேண்டும் என்று மொழிந்தார். தம்மை விட்டுப் பிறருக்காக உழைத்துப் பாடுபடுபவரால்தான் உலகம் உய்யும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு உண்டு. தமக்கென முயல தோன்ருட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே-உலகம் உண்டு : என்ற சங்க காலத் தமிழகத்துக் கருத்து இந்நூற் ருண்டில் சுவைட்சரின் கருத்தாக வெளிவந்தது. தாம் அறிவதைப் பொய்க்காமல் மனச்சாட்சி யினை வேரறுத்துவிட எண்ணுமல், ஒவ்வொரு வரும் தத்தம் பொறுப்பை உணர்ந்து, மன் பதைக்கு அன்பு செய்ய முற்படுவாரானல், இவ் வையகம் வானகம் போன்றதாகும் என்று அவர் நம்பினர். ' ஏழையும் எங்கள் அண்ணனடிசெல்வப் பேழையும் எங்கள் தம்பியடி’ எனக் கருதும் மனப்பான்மை வலுத்து நிலைபேறுடைய தாக வேண்டும் என விரும்பினர். பதவிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறபொழுது, தேர்ந்தெடுக் கும் குழுவினர் ஒருவரை மிக்க தகுதியுடையவர் என்ற கருத்தால் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், அவருக்கு இந்தப் பதவி மிகவும் தேவைப்படுகிறது என்பதை உள்ளத்திற் கொண்டு தேர்ந்தெடுப்பார் ஆயின், உலகம் எவ்வளவு நன்ருய் இருக்கும் என்று சுவைட்சர் கருதியதுண்டு. இவ்வாறு, இரக்கத் தில்ை ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது பொருந்தாது என்று சொல்லும் மக்கள்பால்