பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரின் அருங்கருத்துக்கள் 81 உலகத்தில் வாழும் மக்களும் பிற உயிர்களும் உண்டு என்றும் நம்பவேண்டுமென விரும்பினர். உலகத்திற் பல உயிர்கள் தாமாக அழிவதையும், பிறரால் அழிக்கப்படுவதையும் கண்டு, மனத்தில் வருத்தங் கொள்ளுதல் பேதமை என நினைப்பவ ருடைய கருத்து அவருக்குப் பொருந்தவில்லை. சிலந்தியின் வலையில் எத்துணையோ ஈக்கள் கணந் தோறும் அகப்பட்டு அகப்பட்டுச் சாகின்றன; அவற்றைப் போல இந்த உலகமாகிய வலையில் எத்துணையோ மனிதர்கள் நோய்வாய்ப்பட்டும், போரில் அகப்பட்டும் மாள்கிருர்கள்; அதற்காக நாம் வருந்துதல் ஏனே என்று கேட்கக்கூடியவர் களுடைய மனப்பான்மை சுவைட்சருக்குப் பிடிப்ப தில்லை. சிலந்தியின் வலையிலே ஈக்கள் பல சிக் குண்டு மாள்கின்றன என்ருலும், அந்த ஈக்களைப் பிடித்து இழுத்துத் தள்ளிக் கொண்டுபோய்த் தாய்ச்சிலந்தி தன் குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கவில்லையா எனக் கருதுதல் வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர் சுவைட்சர். தன் குஞ்சுகளுக்காக உழைக்கவேண்டும் என்ற எண் னம் சிலந்திக்கு இருப்பதுபோல, தன் மனைவி மக்கள் சுற்றத்தார் முதலியவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு முதலில் உண்டாக வேண்டும் என விரும்புபவர் அவர். தன் மனேவி மக்களிடம் அன்புகாட்டவும், அவர்களுக் காக உழைக்கவும் ஒருவன் முதலில் தலைப்பட்டால், பிறகு ஊரார்க்கும் உலகத்தினர்க்கும் பிற உயிர் கட்கும் உழைக்கவேண்டும் என்ற எண்