பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - அறிஞரின் அருங்கருத்துக்கள் னிப்பதில்லையா? அவரைப்போல நாமும் பிறர் குற்றங்களைப் பலமுறை மன்னிக்கப் பழக்கப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையிற் சலிக்கும் அளவு இன்னல்தரும் நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தாலும், அவற்றைத் தாங் கிக் கொள்ளக்கூடிய வலிமை மனிதனுக்கு வேண். டும் என்று ஒரு நாள் ஆப்பிரிக்க மக்களுக்கு அவர் எடுத்து உரைத்தார். ஒரே நாளில் ஒருவரை இகழ்ந்து அவர் முன்னிலையில் வேருெருவர் பல அவதூறுகள் சொன்னலும், ஒருவருடைய பொருள் வருவாயைத் தடைப்பண்ணி விட்டாலும், ஒருவருடைய செயற்கருவிகளை எடுத்து மறைத்து வைத்துவிட்டாலும் அவற்றை எல்லாம் பொறுத் அக்கொண்டு, அத்தீமைகள் செய்தவர்க்குத் தீமை செய்ய எண்ணுமல் இருந்தால்தான் அறத்தை ஒருவர் நன்கு கடைப்பிடிப்பவர் என்று சொல்லப் படுவர் எனக் கூறி, சுவைட்சர் பல எடுத்துக் காட்டுக்களினுல் எளிய இனிய நடையில் தம் கருத்துக்களை விளக்கினர் என்று அறிகிருேம். சுவைட்சர் மக்கள் முதலில் தம்மைத் தாமே விரும்பவேண்டும் என்றும், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது என்றும் விரும்பி ர்ை. இவ்வுலகத்தை மாயை என்று சொல்லி, மாயையுலகில் வாழும் எல்லா உயிர்களும் மாயையே என்று கருதி, தமக்கும் நன்மை ஒன்று செய்து கொள்ளாது பிற உயிர்கட்கும் நன்மை ஒன்றும் செய்யாது வாழும் மக்கள் இரங்கத் தக்கவர்கள் என்று கருதினர். இவ்வுலகம் உண்டு என்றும்,