பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞரின் அருங்கருத்துக்கள் 83 என்ற திருக்குறளை அவர் அடிக்கடி ஓதுவது உண்டு. ஒருவர் தம்மைவிட வல்லவரிடத்தில் வம்புக்குப் போகாமல், மெலிந்தவர்களிடத்தில் அடங்காச் செயல்களைச் செய்வது உண்டு. திருவள்ளுவர்க்கு இது பெருங் கொடுமையாகத் தோன்றிற்று; அவ் வாறே சுவைட்சருக்கும் தோற்றுகிறது. வலியவர் முன் ஒருவர் நிற்கமாட்டாது ஓடுவதை உன்னுவா ரானல், மெலியார்க்குத் தீமை செய்ய முற்படார் என்று திருவள்ளுவர் கருதியதால், வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லும் இடத்து’ என்று கூறினர். இதைப்போன்ற பல இடங்களில் திருவள்ளுவர் மக்கள் வாழும் உலகத்தில் தம்மைப் பற்றி எண்ணி, அவ்வெண்ணத்தின் அடிப் படையில் பிற உயிர்களைப்பற்றி எண்ணி இரங்கி, நல்லது செய்ய முற்படவேண்டும் எனத் தமது நூலில் விளக்கியுள்ளார். இவற்றையெல்லாம். போற்றுபவர் சுவைட்சர். பிறர் நன்ருக உடுத்திக் கொள்வதையும், உண் பதையும் பார்த்துக் கயவர் பொருமை கொள்வர். அன்றியும், அவர் நல்ல உடை வாங்குவதற்கும், நன்ருக உண்பதற்கும் எத்துணையோ தீமை செய் துள்ளார்கள் என்று பொய்யாகக்கூட அவரைப் பற்றி இகழ்ந்துரைக்கும் கயவர்கள் உண்டு. அக் கயவர்கள்போல ஒருவர் இருத்தல் ஆகாது என் பதைத் திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார். இக் கருத்தினையும் ஒம்புபவர் சுவைட்சர்.