பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

1 11

நீ குடிக்காமல் இருந்தால்-அதாவது நீ உன் சுயநினைவோடு இருந்தால் உன் உயிருக்குயிரான ராமனை இப்படி அடிக்க உனக்கு மனம் வருமா?

மனைவியின் கால் கொலுசைத்திருடி உனக்கு மது வாங்கிக் கொடுத்த ராமனையே உன்னால் எப்படி அடிக்க முடிந்தது. அவன் மனைவி இந்தப் பொன்னியை நீ எதற்காக அடிக்க எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் உனக்கு ஏற்படாவிட்டால்; உன் அருமை மகள் கண்ணம் மாவுக்கு இவ்வளவு கஷ்டம் நேர்ந்திருக்குமா? இதெல்லாம், உன்னையும் மீறி உன் உத்திரவு இல்லாமலே-உன்னைச் செய்யும்படித் துாண்டி விடுகிற மது அரக்கனின் வேலை என்பது இப் போதாவது உனக்குப் புரிகிறதா?

இத்தகைய கொடுமைகளுக்கு மனிதன் இரை யாகக் கூடாது என்று எண்ணித்தான் காந்திஜி அல்லும் பகலும் ஓயாது மது விலக்குப் பிரசாரம் செய்தார். - -

ஆனால் இதுவரை, வெறும் பிரசாரத்தினா லும், சட்ட திட்டங்களினாலும் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிட வில்லை. முதலில் நம்முடைய மனதி லிருந்து மதுவை அகற்ற வேண்டும்.

குடிப்பதினால், உடம்புக்கு எவ்வித நன்மையு மில்லை-மாறாகச் சேர்த்து வைத்த பணமும்,