பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12

போதை மருந்து ஒழிப்பு மற்றும் கட்டுப் பாட்டுத் திட்டங்களுக்கு, ஐ. நா. சபையின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியின் அளவு:

1980-ம் ஆண்டில் 76 லட்சம் டாலர்களாக இருந்தது. 1986-ல் இது 214 லட்சம் டாலர் களாகவே உயர்த்தப்பட்டது. 1987-ம் ஆண்டில், 316 லட்சம் டாலர்கள் இதற்கென ஒதுக்கப் படும் என்று ஐ. நா. தலைமைச் செயலர் குறிப் பிட்டுள்ளார்)

பணிக்குழு

போதை மருந்துகளுக்கு எதிரான விளம் பரச் செய்திகள் அமெரிக்கச் சமுதாயத்தில் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்குப் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. விளம்பர நிறுவனங் களின் பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்களின் ஆய்வு நிபுணர்கள், போதை மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள தனியார் துறை மற்றும் அரசுத் துறை ஆய்வாளர்கள் ஆகியோர் இப்பணிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். -

-ஜானகி நீலமணி (காயத்ரி பப்ளிகேஷன்)